செய்திகள் :

2025 Rewind: வங்கதேசம், நேபாளம் முதல் பிரான்ஸ் வரை - எதற்கு போராட்டங்கள் நடந்தன?|Gen Z போராட்டங்கள்

post image

ஏ.ஐ, டெக்னாலஜி என ஒரு பக்கம் கலகலக்க, இன்னொரு பக்கம், இந்த ஆண்டு, பல நாடுகளில் போராட்டங்களும், புரட்சிகளும் வெடித்தன.

உலக வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் தான் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதே மாதிரி இந்த ஆண்டு மாற்றங்களை முன்னெடுத்து பல நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுவும் இந்த ஆண்டு போராட்டங்களையும், புரட்சிகளையும் முன்னெடுத்தது பெரும்பாலும் ஜென் Z-யினர்.

இனி இந்த ஆண்டு (2025) நடந்த போராட்டங்களைப் பார்ப்போம்.
Mali | மாலி
Mali | மாலி

பிப்ரவரி -இந்தோனேசியாவில் ஊழல் மற்றும் கொள்கை எதிர்ப்பு போன்றவைகளுக்கு போராட்டங்கள் நடந்தன. இது ஆகஸ்ட் மாதம் வரை நீடித்தது.

மே 3 - மாலியில் ராணுவ ஆட்சி தொடர்ந்து நீடித்து வருவதை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன.

மே 14 - மங்கோலியாவில் ஊழலை எதிர்த்து போராட்டம் நடந்தது. இதனால், ஜூன் மாதம், அந்நாட்டின் பிரதமர் லுவ்சன்னம்ஸ்ரைன் ஓயுன்-எர்டெனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

செப்டம்பர் 8 - நேபாளத்தில் சமூக வலைதளத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதன் விளைவாக, அந்த நாட்டின் அப்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார்.

செப்டம்பர் 12 - எரிபொருள் மானிய நீக்கத்தைக் கண்டித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரிக்கையைக் கோரியும் எக்வடாரில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் செப்டம்பர் மாதம் வரையில் தொடர்ந்தது. அந்த நாட்டின் அதிபர் டேனியல் நோபோவா அவசரநிலையை பிரகடனப்படுத்தியும், போராட்டங்கள் நிற்கவில்லை.

செப்டம்பர் 13 - பெருவில் அதிபர் டீனா போலுவார்டே அரசாங்கம் அமல்படுத்திய ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து ஜென் Z போராட்டம் நடத்தினர். ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ந்த இந்தப் போராட்டம், இடைக்கால தீர்வின் அடிப்படையில் கைவிடப்பட்டது.

போராட்டம் | March for Australia
போராட்டம் | March for Australia

செப்டம்பர் 15 - திமோர்-லெஸ்டேவில், ஜோசே ரமோஸ்-ஹோர்தாவின் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டனர். இந்தப் போராட்டம் அரசியல் தலைவர்களுக்கு கிடைக்கும் சொகுசு சலுகைகளை எதிர்த்து நடந்தது.

செப்டம்பர் 16 - ஈரானில் கட்டாய ஹிஜாப் சட்டம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கு எதிராக உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடைபெற்றன.

செப்டம்பர் - ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் குடியேற்றத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன.

நவம்பர் 15 - மெக்சிக்கோவில் கார்டெல் வன்முறை, ஊழல் மற்றும் அரசு பாதுகாப்புத் தோல்வியைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன.

நவம்பர் 21 - இலங்கையில் வரி சுமை அதிகரிப்பு, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஒழுங்கின்மை காரணமாக அதிபர் அனுர குமார திசநாயக்க அரசிற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன.

டிசம்பர் 15 - கட்டி தோல் நோய் (Lumpy Skin Disease) பாதிக்கப்பட்ட கால்நடைகளைக் கொல்ல வேண்டும் என்று பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. வெளிநாட்டு இறக்குமதிகளை அனுமதிக்கும் EU-Mercosur வர்த்தக ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனின் அரசு. இந்த இரண்டுமே விவசாயிகளைப் பாதிக்கும் என்பதால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர்.

வங்கதேச போராட்டம்
வங்கதேச போராட்டம்

டிசம்பர் - கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவர் இறப்பிற்கு பிறகு, வங்கதேசத்தில் மீண்டும் வன்முறைகள் வெடித்துள்ளன. மாணவர் தலைவர் இறப்பிற்கு இந்தியாவைக் குற்றம் சாட்டுகின்றனர் போராட்டக்காரர்கள்.

.

இன்னும் சில நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன.

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தமா? - மணமகள் யார் தெரியுமா?

இந்தியாவின் பாரம்பரியக் கட்சிகளில் ஒன்று காங்கிரஸ். தற்போது எதிர்க்கட்சியாக செயல்பட்டுவரும் காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் பிரியங்கா காந்தி வத்ரா. இவருக்கும் தொழிலதிபர் ராபர்ட் வத்ரா என்பவ... மேலும் பார்க்க

'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' - தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தையு... மேலும் பார்க்க

நாளை கடைசி நாள்! ரேஷன் அட்டையில் இன்னும் கைரேகை பதியவில்லையா? வெளியூரில் இருப்பவர்கள் என்ன செய்வது?

ரேஷன் அட்டை வைத்திருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது கைரேகையைப் பதிவு செய்திருக்க வேண்டும். - இது பல மாதங்களாக கூறப்பட்டு வரும் ஒன்று. ஆனால், இன்ன... மேலும் பார்க்க

பிம்ப அரசியலின் மறுபக்கம் - தமிழக அரசியல் அரியணை | மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? – 2

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மும்பை மாநகராட்சித் தேர்தல்: 100 வார்டுகளைக் கேட்டுப் போராடிய ஷிண்டே; 90 வார்டுகளைக் ஒதுக்கிய பாஜக

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது.இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜ... மேலும் பார்க்க

Khaleda Zia: 7 முறை சிறை; நாடு கடத்த சதி; யார் இந்த 'ஜனநாயகப் போராளி' கலிதா ஜியா?

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா இன்று காலமானார் என அவரது வங்கதேச தேசியவாத கட்சி (BNP) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் சிதைவு, மூட்டுவலி, நீரிழிவு நோய், இதயப் பி... மேலும் பார்க்க