செய்திகள் :

அன்பில் மகேஸ் கைது: "கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும், திசைத்திருப்பவுமே இந்தக் கைது" - உதயநிதி

post image

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேற்று (அக்டோபர் 26) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்தக் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்துள்ள இந்தச் சர்க்கஸ் ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உதயநிதி பதிவு
உதயநிதி பதிவு

திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டுப் போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்தக் கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM.

சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச் சூழலைச் சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார்.

வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒருபோதும் அடக்க முடியாது.”

அன்பில் மகேஸ் கைது: "நிர்வாகச் சீர்கேடு, பழிவாங்கல், அடக்குமுறை" - திமுக தலைவர்கள் சொல்வது என்ன?

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில், தனியார்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி பெறப்பட்டு மோசடி நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர்... மேலும் பார்க்க

மும்பை: ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் தண்டவாளத்தில் நடந்த பயணிகள்; ரயில் மோதி மூவர் பலியான சோகம்

மும்பையில் நேற்று கஞ்சூர்மார்க்கில் உள்ள சிக்னலிங் ரிலே அறையில், மின்சார ஏற்ற இறக்கம் மற்றும் வெப்ப அதிகரிப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனால் மத்திய ரயில்வேயின் புறநகர் ரயில் சேவைகள் நாள் முழுவது... மேலும் பார்க்க

Dhanush: "தனுஷைப் பார்த்து ஆளுங்கட்சி பதற்றமடைகிறது" - திண்டுக்கல் சீனிவாசன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை அண்ணா நகர் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தைப் பெற்றுக் கொள்வதற... மேலும் பார்க்க

தேனி‌: மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்; இரவோடு இரவாக மூவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறை அமைந்துள்ளது. இந்தச் சிறையில் ஒரே அறையில் 17 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் நேற்று இரவு, அந்த அறையில் இருந்த கைதி ஒருவருக்கு வல... மேலும் பார்க்க

நெருக்கிய போலீஸ்; களத்தில் இறங்காத உடன்பிறப்புகள்!' - அன்பிலை கைவிட்ட அறிவாலயம்?

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அன்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத... மேலும் பார்க்க

புழலில் அன்பில்! - முறையிட்ட திமுக தரப்பு; ஏற்காத நீதிபதி! நள்ளிரவில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கைதான அன்பிலை அழைத்துக் கொண்டு காவல்துறை இரவு 10 மணிக்... மேலும் பார்க்க