செய்திகள் :

'அன்றைக்கு கிண்டல் பேசிய ரஜினிகாந்த்... ஹலோ மிஸ்டர் எக்ஸ் சீஃப் மினிஸ்டர்..!'-வைகோ பேசியதென்ன?

post image

நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

``முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் நம் ஊரில் அல்லாமல் பல்லாயிரம் மையில் கடந்து கிரேக்க நாட்டில் பல்லாயிரம் கோடி செலவழித்து கல்யாணத்தை நடத்தியிருக்கிறார்களே இதைப் பற்றி எந்தத் தொலைக்காட்சியும் வெளியிட ஏன் முன் வரவில்லை.

வைகோ
வைகோ

அன்றைக்கு ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் கல்யாணத்தைப் பற்றி மாதக்கணக்கில், வருடக்கணக்கில் இழிவுப்படுத்தினீர்கள்? அன்றைக்கு கிண்டல் பேசிய ரஜினிகாந்த், இழிவுப்படுத்திய சன் தொலைக்காட்சி இப்படி ஒரு கல்யாணத்தை நடத்தியது எப்படி நியாயம் ஆகும்" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வைகோ, " 6 மாதம் தான் தவெக ஆட்சி நீடிக்கும் என்று ஒரு பெரிய தலைவர் சாபமிடுகிறார். ஹலோ மிஸ்டர் எக்ஸ் சீஃப் மினிஸ்டர் இந்த ஆட்சி 6 மாதம் தான் நீடிக்குமா? இல்லை முழுவதுமாக நீடிக்கும்.

அடுத்து தேர்தல் நடந்தால் 30 சதவிகித சீட்டை விஜய் அதிகமாக ஜெயிப்பார். இந்த வைகோ ஊர் ஊராகச் சென்று அவர்களை ஜெயிக்க வைப்பான். வரும் இடைத்தேர்தலில் தவெக ஜெயிக்கும். நீங்கள் எத்தனை பொய் பிரசாரம் செய்தாலும் அதனைத் தூள் தூளாக்குவதற்கு இந்த வைகோவும், மதிமுகவும் இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'கள்ள மௌனத்தை கலையுங்கள் முதல்வர் விஜய்!'

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட கலெக்டரை தொல்லை செய்யும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அந்த எம்.எல்.ஏவ... மேலும் பார்க்க

`வேல்முருகனின் அரோகரா முழக்கம்: முதல்வரை ஒப்பிட்டு துதி பாட யார் அனுமதி வழங்கியது?' டிடிவி கண்டனம்

திருச்செந்தூர் கோயிலில் நேற்று (நவ.15) நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, முருகப்பெருமானுடன் தமிழக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்ட இயல் இசை நாடக மன்றத் தலைவர... மேலும் பார்க்க

தலித் + இஸ்லாமியர் = 40% வாக்குகள்; சவாலான களத்தில் பாஜக எப்படி வெல்கிறது? | UP Election Explained

2027-ல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் புதிய பிளவுகளும் போட்டி அணிகளும் உருவாகியுள்ளன. ஆளும் பாஜகவை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவிடாமல் த... மேலும் பார்க்க

``தவெக ஆட்சியில் விசிக அமைச்சரும் Reels எடுத்தே தீர வேண்டுமா?" - டிடிவி தினகரன் கேள்வி!

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் நவம்பா் 10-ம் தேதி நலத்திட்ட உதவி மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்த தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசை முதுமலை புலிகள் காப்பகத்தில் தடை செய்ய... மேலும் பார்க்க

``14 ஆண்டுகால திருமண உறவை முடிவுக்கு கொண்டு வருகிறோம்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்ஸி பதிவு!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடனான திருமண உறவை முடிவுக்கு கொண்டுவருவதாக அவரின் மனைவி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``14 ஆண்டுகளாக ஒருவரையொருவர் வாழ்வில் பங்கெடுத்துக்... மேலும் பார்க்க

'எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கே.என்.நேருவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்' - கனிமொழி

கே.என்.நேருவின் இல்லத்திருமண விழா இன்று (நவ.16) நடைபெற்றது. இந்தத் திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திமுகவினர் பலரும் கலந்துகொண்டனர். அந்தவகையில் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு பேசி... மேலும் பார்க்க