செய்திகள் :

“அப்பா எங்கனு அம்மாகிட்ட கேட்டா தானே தெரியும்” - நயினார் நாகேந்திரன் பேச்சால் மீண்டும் சர்ச்சை

post image

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பா.ஜ.க-வின் “ஒரே நாடு” நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதை விமர்சிக்கும் வகையில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அநாகரீகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “சட்டமன்றத்திற்குப் போய் அப்பாவை எங்கே, அப்பாவை எங்கே என தேடுகிறார்கள். வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று சொல்வார்கள். சட்டமன்றத்தில் அப்பாவை தேடினால் யாருக்குத் தெரியும்?” எனக் கூறினார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

மேலும், இதுபோன்றவர்களின் ஆட்சிதான் தற்போது நடைபெற்று வருவதாக முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.

நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க-வுக்குள்ளேயே எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. அக்கட்சியின் முன்னாள் மாநில துணைத் தலைவர் கே.எஸ். நரேந்திரன், நயினார் நாகேந்திரனின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “தலைமை தரம் தாழ்ந்தால், தீவிர சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்” என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம், மாநிலத் தலைவரின் பேச்சுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு உருவாகியிருப்பது வெளிப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன் ஏற்கனவே நடிகை த்ரிஷா குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் தனது பேச்சுக்கு அவர் வருத்தமும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கும் போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம், விஜய்யின் அரசியல் செயல்பாடுகளையும் சட்டப்பேரவை பேச்சுகளையும் பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மறுபுறம் அந்த விமர்சனத்தின் தொனி மற்றும் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் பா.ஜ.க-வுக்குள்ளேயே விவாதத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபியிடம் புகார்

இதற்கிடையே, நயினார் நாகேந்திரனின் பேச்சு தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தமிழக டிஜிபிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் குறித்து புகார் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நயினார் நாகேந்திரனின் பேச்சு அரசியல் ரீதியாக மட்டுமின்றி சட்ட ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிஜிபியிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் மூலம் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு; "தாயை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" - சீறும் அண்ணாமலை

கமலாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.நயினார் நாகேந்திரன்சுதந்திர தின விழாவில் பேசிய நய... மேலும் பார்க்க

"பெண்களுக்கு எதிரான அவதூறுதான் பாஜக அரசியலின் அடிப்படை" - நயினார் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம்

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியிருக்கிறார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு தனது எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

மா.செ-க்களுக்கு செக்; செயல் தலைவராகும் உதயநிதி? - செயற்குழுவில் அதிரடிக்கு தயாராகும் திமுக

துரைமுருகன் மாற்றா ?இளைஞர்களுக்கு வாய்ப்பு… 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சிய... மேலும் பார்க்க

"பயமா? பதற்றமா?" - 11 மதுபானங்களுக்கு விதித்த தடையை வாபஸ் பெற்ற தவெக அரசு - அதிமுக கேள்வி

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 13), தவெக அரசு 'என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்'டைச் சேர்ந்த 11 வகையான மதுபானங்களை டாஸ்மாக்கில் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இந்தத் தடைக்கு அந்த மது... மேலும் பார்க்க

'800க்கு 538 மதிப்பெண்' - 2வது சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு; அலுவலர்கள் பெருமிதம்!

நாடு முழுவதும் 80வது சுந்திரதின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்க... மேலும் பார்க்க