செய்திகள் :

அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு

post image

உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரிகள் 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு கடந்த வாரம் வந்ததில் இருந்து உள்ளுக்குள்ளும், வெளியேயும் புகைந்துகொண்டு தான் இருக்கிறார் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப்.

இந்த நிலையில், தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை சாடி தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை ட்ரம்ப் பதிவிட்டிருக்கிறார்...

ட்ரம்ப்
ட்ரம்ப்

"பல ஆண்டுகளாக அமெரிக்காவை சுரண்டிக் கொண்டிருக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் செல்லலாம்.

இந்தத் தீர்ப்பு சுரண்டலை இன்னும் அதிகரிக்கக் கூட செய்யும்.

பல ஆண்டுகளாக, நம்மை சுரண்டி பல பில்லியன் டாலர்கள் பெற்ற நாடுகள் இந்தத் தீர்ப்பால் மீண்டும் அதிக பணத்தைப் பெறப் போகின்றனர். இது நியாயமானது அல்ல.

இந்த வழக்கின் மறு விசாரணை அல்லது மறு தீர்ப்பு சாத்தியமா???" என்கிற கேள்வியோடு பதிவை முடித்திருக்கிறார்.

https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328

'விஜய்யின் கதை நேற்று மாலையோடு முடிந்தது!' - அறிவாலயத்தில் தமீமுன் அன்சாரி!

அறிவாலயத்தில் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது விஜய் குறித்த அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படு... மேலும் பார்க்க

'ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி; மற்றவை...' - பேச்சுவார்த்தைக்கு பின் காங்கிரஸ்!

திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது.Congressஅதை தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசியதாவது... மேலும் பார்க்க

StartUp சாகசம் 57: `உலகளாவிய சிறுதானியச் சந்தை; மதிப்புகூட்டி சாகசம் செய்யும் Even More Foods

Even More FoodsStartUp சாகசம் 57இந்தியாவின் அடுத்த பெரும் ஏற்றுமதி வாய்ப்புதமிழ் மண்ணில் வேரூன்றிய மரபு அறிவு இன்று உலகச் சந்தையில் பெரும் வாய்ப்பாக மாறி வருகிறது.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இடைக்காட... மேலும் பார்க்க

Cuba: அமெரிக்கா உடன் இணைகிறதா கியூபா? - ட்ரம்ப் கொடுக்கும் அதிர்ச்சி ஹின்ட்

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 'கிரீன்லாந்து' மீதிருந்த டார்கெட் சென்று, இப்போது 'கியூபா'விற்கு வந்திருக்கிறது போலும்.நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்‌ ட்ரம்ப். அப்போது அவரிடம்‌ அமெர... மேலும் பார்க்க

Congress: '39 லட்சியம்; 30 நிச்சயம்! - அறிவாலயம் வந்த காங்கிரஸ் குழு

திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அறிவாலயம் வந்திருக்கிறது.Congதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச கடந்த நவம்பரில் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்ற... மேலும் பார்க்க

'ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைப்பற்றி கூறவில்லை'- தி கேரளா ஸ்டோரி 2 சினிமா மீதான தடையை நீக்கிய ஐகோர்ட்!

லவ் ஜிகாத்தை மையமாகக்கொண்டு வெளியான கேரளா ஸ்டோரி சினிமாவின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. 'தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்' என்ற திரைப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார... மேலும் பார்க்க