செய்திகள் :

அமெரிக்க தேர்தலில் செக்? ஜனநாயகக் கட்சி முன்னிலை! - ட்ரம்பை இந்தத் தோல்வி கட்டுப்படுத்துமா?

post image

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது ஜனநாயகக் கட்சியின் கை மேலோங்கியுள்ளது.

2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, காங்கிரஸில் குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மையாக இருந்தது.

குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என்று குழப்பமாக இருக்கிறதா? குடியரசுக் கட்சி என்பது ட்ரம்ப் கட்சி. ஜனநாயகக் கட்சி அவரது கட்சியின் எதிர்க்கட்சி.

அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கீழ்சபை, மேல்சபை என இரு சபைகள் உள்ளன.

கீழ்சபை பிரதிநிதிகளின் சபை ஆகும். இதில் மொத்தம் 435 இடங்கள். பெரும்பான்மை பெற 218 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

அமெரிக்கக் கட்சிகள் | சித்தரிப்புப் படம்
அமெரிக்கக் கட்சிகள் | சித்தரிப்புப் படம்

மேல்சபை செனட் ஆகும். இதில் மொத்தம் 100 இடங்கள். இதில் பெரும்பான்மை பெற 51 இடங்கள் வேண்டும். மேல்சபை, கீழ்சபை இரண்டிலுமே ஜனநாயகக் கட்சிதான் லீடில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் மேல்சபையில் 51 இடங்களைத் தாண்டி ஜனநாயகக் கட்சி முன்னிலையில் இருக்கிறது.

ட்ரம்ப் மீது என்ன அதிருப்தி?

Make America Great Again என்று ஆட்சியைப் பிடித்தவர்தான் ட்ரம்ப். எல்லாமே அமெரிக்காவிற்காகத்தான் செய்து வருகிறேன் என்று தொடர்ந்து முழங்கி வருகிறார்.

பின்பு ஏன் ட்ரம்ப் கட்சிக்கு இந்தச் சறுக்கல் என்று பார்த்தால், அவர் மீது இருக்கும் அதிருப்தியையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவதில் எல்லாம் அமெரிக்க மக்கள் ஹேப்பி.

ஆனால், பரஸ்பர வரி மற்றும் ஈரான் போர் விஷயத்தில்தான் அமெரிக்க மக்களுக்கு நெருடல். அமெரிக்காவிடம் அதிக வரி வசூலிக்கிறார்கள் என்றுதான் பிற நாடுகள் மீது வரிகளைப் போட்டுத் தள்ளினார் ட்ரம்ப்.

பிற நாடுகளின் மீது வரிகளை இறக்கியபோது, அந்தச் சுமை அமெரிக்க மக்களின் தோள்களிலும்தான் இறங்கியது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

அடுத்ததாக, ஈரானால் அமெரிக்காவிற்கு எந்த நேரடிப் பாதிப்பும் இல்லை. ஆனால், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது போரைத் தொடங்கினார் ட்ரம்ப்.

இதனால், உலக நாடுகளில் எப்படி எண்ணெய் விலை ஏறியதோ, அதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. மேலும், அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கிலும் ஆயுதங்கள் கணிசமாகக் குறைந்தன. இதை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை.

ஈரான் போரினால் பணவீக்கம் அதிகரித்து, அமெரிக்காவின் மத்திய வங்கி ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை ஏற்றியுள்ளது. இதுவும் அமெரிக்க மக்களுக்கு அதிருப்தி.

ட்ரம்பைத் தடுக்க முடியுமா?

முன்னரே சொன்னதுபோல, இதுவரை நாடாளுமன்றத்தில் எந்த மசோதா, சட்டம் இயற்றப்பட்டாலும், பெரும்பான்மையோடு நிறைவேறி வந்தது. இப்போது இதற்கு செக் வைக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் ஏதேனும் சட்டம் கொண்டுவந்தாலும், அதை எதிர்த்து காங்கிரஸ் வாக்களிக்க முடியும். இருந்தாலும், காங்கிரஸ் மசோதாவை எதிர்த்தாலும், அதை அதிபரால் (ட்ரம்ப்) வீட்டோ செய்ய முடியும்.

இதைத் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்திலேயே மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார் ட்ரம்ப். ஈரான் போருக்கு எதிராகத்தான் ஜனநாயகக் கட்சி இருக்கிறது.

இந்தத் தேர்தலுக்குப் பின், இதற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர நிச்சயம் ஜனநாயகக் கட்சி முயலும்.

அதை ட்ரம்ப் வீட்டோ செய்வாரா அல்லது ஏற்றுக்கொள்வாரா என்பதைப் பார்க்கலாம்.

'நண்பா... நண்பீஸ் உங்களுக்கு அரசியல் வேண்டாம்!' - மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

தவெக கட்சி சார்பில் 10, 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நீலாங்கரையில் தனியார் மண்டபத்தில் நடந்து வருகிறது. நிகழ்ச்சியில் தலைமையேற்று விருதுகளை வழங்கும்... மேலும் பார்க்க

தவெக அரசு Vs டாஸ்மாக் ஊழியர்கள் - என்னதான் பிரச்னை?!

தமிழ்​நாடு முழு​வதும் காலி மது​பானப் பாட்​டில்​களைத் திரும்​பப் பெறும் திட்டத்​தைச் செயல்​படுத்​து​வதற்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்​கள்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகப் பல்வேறு... மேலும் பார்க்க

US Elections: இந்திய வேர்கள்... அமெரிக்க அரசியல் களம் - மீண்டும் வெற்றி பெற்ற சுஹாஸ் சுப்ரமணியம்!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த சுஹாஸ் சுப்ரமணியம் (Suhas Subramanyam), ஒபாமா நிர்வாகத்தில் தொழில்நுட்பக் கொள்கைப் பணிகளை மேற்கொண்டு, விர்ஜீனியா மாகாண அரசியலில் ... மேலும் பார்க்க

"பாஜகவின் ஆதரவோடு அதிமுகவும், திமுகவும் ஆட்சியமைக்க முயல்கிறது" - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில்அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தி... மேலும் பார்க்க

மணப்பாறை: வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் கடும் அவதி!

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுபற்றி நம்மிடம் பேசிய, பா.ஜ.க மணப்பாறை ... மேலும் பார்க்க