செய்திகள் :

அமைச்சர் சரத் குமார் வீடியோ: ``விளக்கமளிக்க வேண்டும்; இல்லையெனில் பதவி விலக வேண்டும்" - தமிழிசை

post image

தவெக அமைச்சர் சரத் குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது.

இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``மயிலாப்பூரில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், காப்பீட்டுத் திட்டங்களின் பலன்கள் அவர்களைச் சென்றடைவதற்காகவும் மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ்நாடு முதல்வர் போலியோ சொட்டு மருந்து தினத்தைத் தொடங்கி வைத்தது பாராட்டக்குறியது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தருவதை எதிர்த்து தி.மு.க-விலிருந்து வெளியேறி, தொண்டர்கள் தீக்குளித்த சம்பவங்கள் நடந்தும், இறுதியில் அவர்களின் ஆன்மாவை மிதித்துவிட்டு மீண்டும் தி.மு.க-விடமே வைகோ கூட்டணி வைத்தார்.

அவர் எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகி மீண்டும் தேர்தலை எதிர்க்கொள்வார்களா? இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு... இதுதவிர, வைகோவின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு தொண்டர்களை கிள்ளுக்கீரையைப் போல பயன்படுத்துகிறார்.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை தி.மு.க மற்றும் த.வெ.க ஆகிய இரண்டையுமே சமமாகத்தான் எதிர்க்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்து, குதிரை பேரம் நடத்துபவர்களே அதைப்பற்றிப் பேசுவது வியப்பாக இருக்கிறது.

40 நாட்களுக்குள் அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வதால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றுவது போன்ற இந்துக்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்குத் தற்போதைய அரசு மதிப்பளிக்க வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

அரசு மருத்துவர்கள் உயர் படிப்பு முடித்த பின் மீண்டும் பணிக்குத் திரும்பாத பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் லஞ்சத்தை ஒழிப்பதாக சுகாதார அமைச்சர் கூறினாலும், ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பிடிபட்ட 54 லட்சம் தொகையில் 24 லட்சம் ரூபாய் GPay மூலமாகப் பெறப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் சிறு வணிகர்கள் கூடப் பயனடையும் வேளையில், தமிழகத்தில் லஞ்சம் என்பது 'டிஜிட்டல் ஊழலாக' மாறியுள்ளது கவலைக்குரியது. இதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

தமிழக அமைச்சர் ஒருவர் பொதுவெளியில் செல்போனை வைத்து ஏதோ ஒரு பொடியைச் செய்ததை சர்வதேச குழந்தை நல மருத்துவர்களே வியந்து பார்க்கிறார்கள். முதலமைச்சர் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற சிக்கல்களுக்கு முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அது மருத்துவப் பொடியா அல்லது போதைப்பொருள் கலந்ததா என்பதை முதலமைச்சர் ஆராய வேண்டும். இளைஞர்களுக்குத் தவறான முன்மாதிரியாக இருக்கும் அந்த அமைச்சர், உண்மை விளக்கத்தை அளிக்க வேண்டும், இல்லையெனில் பதவி விலக வேண்டும்'' என்றார்.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க