செய்திகள் :

அமைச்சர் ஜெகதீஸ்வரி போட்ட கம்பி வேலியை பிய்த்து எறிந்த சொந்த ஊர் மக்கள்! - பதட்டத்தில் பனைவிளை

post image

'அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி!' – வருந்தும் சொந்த கிராம மக்கள் என்கிற ஒரு செய்தியை

நான்கு தினங்களுக்கு முன் விகடன் தளத்தில்  வெளியிட்டிருந்தோம்.

தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சர் தனது சொந்த ஊரில், ஊர் மக்கள் பயன்படுத்தி வந்த கிண்ற்றைச் சுற்றிக் கம்பி வேலி அமைத்தது குறித்த செய்தி அது.

திசையன் விளை அருகேயுள்ள பனைவிளை கிராமத்து மக்கள் இதுதொடர்பாக நம்மிடம் வருத்தத்துடன் பேசியதைத் தொடர்ந்து அமைச்சர் தரப்பிலும் நாம் கருத்து கேட்க முயன்றும் அவர் தரப்பில் பதில் தராதது குறித்தும் குறிப்பிட்டிருந்தோம்.

பனை விளை கிராமத்தில்பிய்த்து எறியப்பட்ட கம்பி வேலி

நம் தளத்தில் செய்தி வெளியானதும் மாவட்டத்திலிருக்கும் பத்திரிகையாளர்கள் சிலரைத் தொடர்பு கொண்ட அமைச்சரது ஆட்கள் சிலர் செய்தியை யார் கொடுத்தது என விசாரித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக அமைச்சர் வீட்டார் அமைத்திருந்த அந்தக் கம்பி வேலி பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

ஆனால் யார் பிடுங்கி எறிந்தது எனத் தெரியவில்லை.

’அமைச்சரிடம் முதலில் ஒரு  மரியாதைக்கு நேரில் போய் பேசி கிணற்றைப் பழைய மாதிரியே எல்லாரும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க கேட்டுப் பார்ப்போம்’ அவர் மறுத்தால் என்ன செய்வது என பிறகு யோசிப்போம் என உள்ளூர் இளைஞர்கள் ஏற்கனவே பேசி வந்ததாகவும் தெரியவருகிறது.

முன்னதாக ஊர் மக்கள் கிணறு தொடர்பாக மனு கொடுக்க வந்த போது மனுவை வாங்க மறுத்து விட்டார் ஜெகதீஸ்வரி என்பதையும் நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியில் சுட்டிக் காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அமைச்சர் தரப்பில் காவல்துறையினரைக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப் படுவதால் பனைவிளை கிராமத்தில் ஒருவித பதட்டம் நிலவி வருகிறது.

'விஜய்யின் ஆன்லைன் தளபதி; ஜெகதீஸின் பரிந்துரை!'- TN Fact Check Unit இன் தலைவராக்கப்பட்ட 'குரு' யார்?

தமிழக அரசின் 'உண்மை சரிபார்ப்புக் குழு'வின் பெயரை 'தகவல் நம்பகத்தன்மை சரிபார்ப்புக் குழு' எனப் பெயர் மாற்றி 'குரு' என்பவரை அதற்கு தலைவராக நியமித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. யார் இந்த குரு?அம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "உடனே தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது!" – உச்ச நீதிமன்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிர... மேலும் பார்க்க

மின்வாரியம்: ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கோரிக்கை நிலுவையில் இருந்தது. இந்நிலையில், உதவி பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு உதவி செயல் பொறியாளர்களாக பதவி உயர்வு அள... மேலும் பார்க்க

தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்; விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், ““இவ்வளவு கேவலமான முதல்வரை தமிழகம் மட்டுமல்ல, இந்திய... மேலும் பார்க்க

மேகதாது: ``போராடிப் பெற்ற தீர்ப்பைக்கூட இந்த அரசால் காப்பாற்ற முடியாத நிலை" - எடப்பாடி பழனிசாமி

தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ``தீரன் சின்னமலையி... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: `முன்னிலையில் பிரசாந்த் கிஷோர்' - கவனம் ஈர்க்கும் பீகார்!

பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பா.ஜ.க-வைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மத்திய ப... மேலும் பார்க்க