செய்திகள் :

”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

post image

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் இன்று திறக்கப்பட்டது. நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தனது இருக்கையில் அமர்ந்த ஜவாஹிருல்லாவை திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஜவாஹிருல்லா

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜவாஹிருல்லா, ``தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 5 பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. 3 வயது குழந்தை இறந்துள்ளது, வேதனையை ஏற்படுத்துகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படை இருந்தும், போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அதிகரித்து விரைந்து வழக்குகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக போட்ட சாலையில் பயணித்து, திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் தயவால் வெற்றிபெற்று அமைச்சராக இருக்கும் ஷாஜஹான், திமுகவிற்கு எதிராக இப்படி பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு. நல்ல ஷாஜகான் மும்தாஜுக்கு கல்லறை கட்டினார், இந்த ஷாஜஹான் அவர் சார்ந்துள்ள கட்சிக்கு சமாதி கட்டும் வேலைகளை செய்து வருகிறார். சிறுபான்மையினர் வாக்கு திமுகவிற்கு கிடைக்கவில்லை என்பது திட்டமிட்டு பரப்படும் சதி. இஸ்லாமியர்கள் நிறைந்த தொகுதிகளில் திமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தது, டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது இஸ்லாமியர்கள் திமுக மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு ஒரு சான்று.

அமைச்சர் ஷாஜஹான்

இஸ்லாமியர்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெறமுடியவில்லை என்பதே உண்மை. தவெக தேர்தல் அறிக்கையில் கொடுத்த ஒரு வாக்குறுதி கூட இதுவரை நிறைவேற்றவில்லை. அழுத்தம் கொடுத்த காரணத்தால் மட்டுமே கடந்த திமுக அரசு கொண்டுவந்த ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறது. டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படாத காரணத்தால் விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர் ஆகவே குறுவை சாகுபடி செய்வதற்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்" என்றார்.

'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.234 உறுப்பினர்களைக் ... மேலும் பார்க்க

ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்கு வந்த கட்சிகள் எவை?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி கூட்டத்தை தி... மேலும் பார்க்க

"மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" - அதிமுக-விலிந்து விலகுகிறாரா எம்எல்ஏ விஜயபாஸ்கர்?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இதனைத்தொடர்ந்து அதிமுகவிலிருந்து சில எம்.எல... மேலும் பார்க்க

"திமுக இனி எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும்"- தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் கூட்டறிக்கை

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் திமுகவிற்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். ம... மேலும் பார்க்க