செய்திகள் :

"தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் உயிராய் நேசித்த..." - அதிமுக-விலிருந்து விலகிய விஜயபாஸ்கர்

post image

அதிமுக சார்பில் ஐந்து முறை போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து இன்று விலகினார். அதிமுகவிலிருந்து விலகியது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

சி விஜயபாஸ்கர்
சி விஜயபாஸ்கர்

அந்த அறிக்கையில், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மகத்தான மக்கள் இயக்கத்தில், 'அம்மா' என்ற ஆருயிர் ஒற்றை வார்த்தையால் ஈர்க்கப்பட்டு, என் மாணவர் பருவத்திலிருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், இரண்டாவது தலைமுறையாகவும் என் வாழ்க்கைப் பாதையில் இயக்கத்தோடு என்னை அர்ப்பணித்தவன் நான்.

எனக்கு இந்த இயக்கம் ஓர் அரசியல் அமைப்பு மட்டுமல்ல; என் உணர்வும், என் அடையாளமும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியும் ஆகும்.

மாணவர் அணியில் தொடங்கிய என் அரசியல் பயணம், எழுச்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் களங்கள் என இந்த இயக்கம் ஓர் அர்ப்பணிப்புமிக்க தொண்டனாக என்னை வழிநடத்தியது. என் இளமை, என் உழைப்பு, என் கனவுகள் அனைத்தும் இந்த இயக்கத்தோடு பின்னிப்பிணைந்தவை.

அம்மா வாழ்ந்த பொற்காலத்தில், இந்த இயக்கத்தில் பணியாற்றியதை ஒரு பொறுப்பாக மட்டுமல்ல; பெரிய பெருமையாகவும், பெரும் வரமாகவும், என் பாக்கியமாகவும் நான் கருதினேன்.

ஆனால் இன்றோ, தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இந்தச் சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி என் பயணத்தைத் தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன்.

சி. விஜயபாஸ்கர் அறிக்கை
சி. விஜயபாஸ்கர் அறிக்கை

எனவே, கனத்த இதயத்துடனும் கலங்கிய மனதுடனும், இதுவரை என்னுடன் பயணித்த ரத்தத்தின் ரத்தங்களான கழகத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு, இந்த மகத்தான இயக்கத்திலிருந்து மனவலியோடு விலகுகிறேன்.

நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் ஓர் அத்தியாயத்திலிருந்து! வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும், என் மண்ணுக்கான, மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்... தொடர்வேன்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பயிர்க்கடன் தள்ளுபடி: "ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி" - முதல்வர் அறிவிப்பின் முழு விவரம்

கடந்த மே 25-ம் தேதி ரூ. 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.பல்வேறு பக்கங்களிலிருந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி மற... மேலும் பார்க்க

பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.75,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி | Live Updates

பயிர்க்கடன் தள்ளுபடி - முதல்வர் அதிரடி அறிவிப்புகடந்த மே 25-ம் தேதி ரூ. 50,000 வரை பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். பல்வேறு பக்கங்களி... மேலும் பார்க்க

`56' ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழகக் காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் எஸ்.பி அந்தஸ்திலான 56 உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை இன்று (15.06.2026) உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அரச... மேலும் பார்க்க

``6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு: பெரியார் பிறந்தநாளில் அமல்" – முதல்வர் விஜய்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று (15.06.2026) முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க

நெல்லை: ஆட்சியர் அலுவலகம் அருகே தாமிரபரணி கரையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் | Photo Album

திருநெல்வேலி: ஆட்சியர் அலுவலகம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள்.!நெல்லை மாவட்டம், சொக்கம்பட்டி சுயம்பூற்றுநாதர் கோயில் : மனச்சுமைகள் குறையும்... உற்சாகம் பிறக்கும்! மேலும் பார்க்க

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள் எல்லைக்குள் வராது' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இந்த வசனத்தை திரைப்படங்களில்கூட கேட்டிருப்போம். சாதாரண மக்களுக்கு எங்கே நடந்த ... மேலும் பார்க்க