செய்திகள் :

"அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தில் காதலிக்கு ஐபோன்" - கைதான ஊழியர் வாக்குமூலம்

post image

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும் ஊழியர்கள் அப்பணத்தைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்துள்ளது.

இத்திருட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அவினாஷ் சுக்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பணத்தைத் திருடி, தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காதலிக்கு ஆடம்பரப் பரிசுகளை வாங்கியதாக போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் பணத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி தற்காலிக ஊழியர் அவினாஷ் சுக்லா, தான் திருடிய பணத்தில் சுமார் ரூ.19 லட்சத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்காகச் செலவழித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், அவினாஷ் சுக்லா தனது காதலியின் வங்கி வழிக் கணக்கிற்கு நேரடியாக ரூ.2.5 லட்சம் பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பியுள்ளார்.

 சம்பத் ராய்
சம்பத் ராய்

மேலும், அவருக்கு ஒரு விலையுயர்ந்த ஐபோன் ஒன்றையும் உண்டியல் பணத்தில் வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். தனது ஒரு சகோதரனின் ஆடம்பரத் திருமணத்திற்காக ₹6 லட்சம் பணத்தை அவர் செலவிட்டுள்ளார். மற்றொரு சகோதரனுக்கு ரூ.5 முதல் 6 லட்சம் வரை நேரடி ரொக்கப் பணத்தைக் கொடுத்துள்ளார்.

திருடப்பட்ட பணத்தைக் கொண்டு சுமார் ₹3.5 லட்சம் மதிப்பில் ஒரு மாருதி காரை வாங்கியுள்ளார். போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, இந்தக் காரைத் தனது சகோதரர் அபிஷேக் பெயரில் அவர் பதிவு செய்திருந்தார்.

போலீசார் நடத்திய சோதனையில் அவினாஷ் சுக்லாவிடமிருந்து ரூ. 20.39 லட்சம் ரொக்கம், 1.121 அமெரிக்க டாலர், தங்கம், வெள்ளி நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பண முறைகேடு புகாரைத் தொடர்ந்து, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

சம்பத் ராயின் ராஜினாமாவை அடுத்து, ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பின் மூத்த நிர்வாகியும், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியுமான கிருஷ்ண மோகன் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

`எனக்கு தனியாக செய்ய துணிச்சல் இல்லை... நீயும் வா!'- புனே தொழிலதிபர் கொலையில் வெளியான `பகீர்' தகவல்

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நிச்சயிக்கப்பட்ட மனைவி ஷியா கோயலுக்கு, ஏற்கெனவே அவரது காதலன் சேத்தன் சவுத்ரி என்ற நபருடன் ரகசியத் திருமணம் நடந்துள்ளது, போலீஸ் வ... மேலும் பார்க்க

சென்னை: தங்கக்காசு மோசடியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது - அடுத்து சிக்கப் போவது யார்?

சென்னையில் உள்ள தனியார் வங்கியில், ஊழியராகப் பணியாற்றிவரும் ராஜன் (பெயர் மாற்றம்) என்பவரிடம் கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார். அப்போது பிரபுமணி, ‘4,500 ரூபாய... மேலும் பார்க்க

11 மாதக் குழந்தையின் மரணத்தில் சந்தேகம்; கொன்றுவிட்டு நாடகமாடுகின்றனரா பெற்றோர்? பிண்ணனி என்ன?

பெங்களூரு கிழக்குப் பகுதியில் உள்ள அவலஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிதாகனூர் கிராமத்தில் வசிக்கும் ஷேகப்பா தனது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அள... மேலும் பார்க்க

விருதுநகர்: சிறுமி மீது கார் ஏற்றிக் கொலை செய்ய முயற்சியா? தட்டிக்கேட்ட தந்தைக்குக் கொலை மிரட்டல்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைடுத்த வந்தவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது 43). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த குண்டுமலை குடும்பத்தினருக்கும் கோயில்... மேலும் பார்க்க

`அவள் எனக்கு மட்டும்தான்’ - வேறொருவரின் மனைவியுடன் தொடர்பிலிருந்த இருவர்; கொலையில் முடிந்த கொடூரம்

வேலூர் அருகேயுள்ள சதுப்பேரியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42), பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் சிறுகாஞ்சியிலுள்ள விவசாய நிலப்பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் க... மேலும் பார்க்க

கல்லூரி விடுதியில் கட்டில்கள் திருடிய முன்னாள் மாணவன்; காவலரால் கையும் களவுமாகச் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிரபலமான மகாராஜாஸ் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் அங்கமாலி, சக்குவீடு பகுதியைச் சேர்ந்த ஆன்ஸ்டன் (23) என்பவர் தாவரவியல் பிரிவில் படித்துவந்தார். கடந்த 2024-ம் ஆண்... மேலும் பார்க்க