செய்திகள் :

அரக்கோணம்: ரயிலில் மது அருந்தி புகைப்பிடித்த போதை ஆசாமிகள் - பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி!

post image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்கள் மூலம் ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவ - மாணவியர், கூலித்தொழிலாளர்கள் என பலத்தரப்பினரும் பயணிக்கின்றனர்.

இந்த நிலையில், ரயில்களில் பயணம் செய்யும் நபர்கள் சிலர் கழிவறை மற்றும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு மது குடிப்பது, புகைப்பது என அட்டூழியம் செய்வதும் தொடர்க்கதையாகியிருக்கிறது.

மது குடித்த போதை ஆசாமிகள்

நேற்று முன்தினம், அரக்கோணத்தில் இருந்து சென்னை புறப்பட்ட மின்சார ரயிலில் 2 நபர்கள் படிக்கட்டு அருகே அமர்ந்தபடி மது பாட்டில்களை கையில் வைத்துக்கொண்டு மது குடித்தனர். சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி, அவர்களிடம் `இங்கு இப்படி மது அருந்தலாமா?’ என்று கேட்டபோது, அவரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இந்த காட்சிகளை அந்த பயணி, சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுபோன்ற அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

சொத்து தகராறில் காட்டுமிராண்டித்தனம்; வயதான தாயை காலால் எட்டி உதைத்த மகன் - பரவும் அதிர்ச்சி வீடியோ!

திருப்பத்தூர் அருகேயுள்ள விஷமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய மூதாட்டி விஜயலட்சுமி. இவருக்கு கோபி, ஜோதிராஜ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தனது கணவரின் பெயரில் இருந்த நில... மேலும் பார்க்க

வேறொரு பெண்ணுடன் திருமணம்; விபரீத முடிவெடுத்த காதலி - கூமாபட்டி இளைஞரை சிக்க வைத்த சிசுவின் DNA

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த சேர்வாரன் என்பவரது மகள் ஈஸ்வரியும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் கடந்த 2019ம் ... மேலும் பார்க்க

Magic Mashroom: பறிபோன காதலியின் உயிர்; அப்போதும் அடங்காத போதை காளான் வெறி! அதிர்ச்சி பின்னணி

மேஜிக் மஷ்ரூம் எனப்படும் போதை காளான்களை நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தேடி அலையும் இளைஞர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதையில் புதுமையைத் தேடுகிறோம் என்கிற பெயரில் ஆபத்து நிறைந்த காடுக... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி – 3 பேர் மீது வழக்கு பதிவு!

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பீட்டர் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர்களது குடும்ப நண்பரான சென்னைய... மேலும் பார்க்க

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் இருந்த ரௌடி எண்ணூர் தனசேகரன்; துப்பாக்கி முனையில் கைதுசெய்த போலீஸ் டீம்!

சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். பிரபல ரௌடியான இவர்மீது, ஏழு கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வழக்கு ஒன்றில் கைதான தனசேகரன் கடலூர் மத்தியச் ... மேலும் பார்க்க

`தந்தை வேலை எனக்குத்தான்.!' - அரசு வேலை, சொத்துக்காக தாயை கூலிப்படை மூலம் கொன்ற சட்டக்கல்லூரி மாணவி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்ப சொத்து மற்றும் அரசு வேலைக்காக 23 வயது சட்டக் கல்லூரி மாணவி ஆயுஷி சர்மா தனது 45 வயது தாய் நீரஜ் சர்மாவை கூலிப்படை வைத்து கொலை செய்த குற்றத்திற்காக போலீஸார் கைது ச... மேலும் பார்க்க