செய்திகள் :

``அலைக்கழிப்பு... கொள்முதல் செய்யப்படாமல் கிடக்கும் 6 லட்சம் மூட்டை நெல்" - அன்புமணி ராமதாஸ்

post image

காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகிறது என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் மூட்டை நெல் தேக்கம். குறைகளை சரி செய்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும்! தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 6 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உழவர்கள் அரும்பாடு பட்டு விளைவித்த நெல் மூட்டைகளை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது.

அரசு நெல் கொள்முதல் நிலையம்
அரசு நெல் கொள்முதல் நிலையம்

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் நெல் மூட்டைகளும், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பிற பாசன மாவட்டங்களில் 3 லட்சம் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அதனால், நெல்லை அறுவடை செய்த உழவர்கள் நெல் மூட்டைகளுடன் இரவு பகலாக கொள்முதல் நிலையங்களில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கிருந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது, கொள்முதல் நிலையங்களில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாதது உள்ளிட்டவை தான் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் ஆகும்.

காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில நாள்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்படவில்லை என்றால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது. கொள்முதல் நிலையங்களில் சேரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குகளுக்கும், அரவை நிலையங்களுக்கும் கொண்டு செல்வதற்கான வசதிகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களைப் போலவே நடப்பாண்டிலும் போதிய கிடங்கு வசதிகள் இல்லாததும், நெல் மூட்டைகள் உடனுக்குடன் அகற்றப்படாததும் நெல் கொள்முதலை பாதித்திருக்கிறது.

 பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து அடுக்கி வைக்கும் பணிகளில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி மிகவும் குறைவாக இருப்பதால், போதிய எண்ணிக்கையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிக்கு வருவதில்லை. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 30% சுமை தூக்கும் தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வருவதால் ஒவ்வொரு நாளும் 900 முதல் 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுவதற்கு பதிலாக, 300 முதல் 400 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை அறுவடை இப்போது தான் தொடங்கியிருக்கிறது.

அடுத்து வரும் நாள்களில் அறுவடை தீவிரமடையும் போது கொள்முதல் நிலையங்களில் இன்னும் பல மடங்கு நெல் மூட்டைகள் தேங்கும் நிலை உருவாகும். இந்த நிலைமையை மாற்ற கிடங்குகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் ஆணையம்: ``இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" - முன்னாள் ஆணையர் சொல்வதென்ன?

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி தனிச்சையாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவ... மேலும் பார்க்க

`மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பு; கடந்த 10 மாதங்களில் நடந்ததை மட்டும்..!' - ECI விளக்கம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 1.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது, 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம்: ``ஒரு நல்ல முயற்சி... ஆனால்" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் அல்லது பிற அமைப்புகளின் நிர்வாகத்திற்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் இத்தக... மேலும் பார்க்க

"தவெக ஆட்சி வந்தது நல்லதுதான்!" - சொல்கிறார் நாதக பாத்திமா பர்கானா

2026 சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் எதிர்வரும் இடைத்தேர்தலில் மீண்டும் தனித்தேப் போட்டியிடுவதாக அறிவித்திருக்க... மேலும் பார்க்க

DMK: 'சீனியர்கள வச்சிட்டு எதுவும் செய்ய முடியாது' - விரக்தியடைந்த உதயநிதி.. பின்னணி என்ன?

த.வெ.க செயல்பாடுகளை எதிர்கொள்ள முடியாமல் தி.மு.க திணறிவருவதாகச் சொல்லப்படும் சூழலில், சீனியர்களை வைத்து கட்சி நடத்த முடியாமல் உதயநிதி திணறுவதாக சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். அதன் பின்னணி குறித்து அறிவ... மேலும் பார்க்க

"அமைச்சர் நிர்மல்குமார் கண்ணியக் குறைவாக பேசவில்லை.. பேசியது தி.மு.க-தான்! - விசிக எழில் கரோலின்

விடுதலை சிறுத்தைகள் கட்சிமீதான தே.மு.தி.க-வின் விமர்சனம், வி.சி.க-வின் இடைத்தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கிவி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஏழில் கரோலினிடம் பேசினேன்."அமைச்சர் பதவிக... மேலும் பார்க்க