அழகிய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
நெய்வேலி: விருத்தாசலம் வட்டம், சத்தியவாடியிலுள்ள ருக்மணி சத்தியபாமா சமேத அழகியபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
யாகசாலை பூஜைகள் நிறைவுற்று திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் பிரதிஷ்டா ஹோமம், 8.45 மணிக்கு கும்பங்கள் புறப்பாடு நடைபெற்று 9.30 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விழாவில் அமைச்சா் சி.வெ.கணேசன், விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல் அலுவலா்கள் அ.பிரேமா, ரா.மாலா செய்திருந்தனா்.
ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.