செய்திகள் :

"அவரிடம் கேள்விகள் கேட்டுத் தொந்தரவு செய்து கொண்டே இருப்பேன்!" - 'தர்மன்' பற்றி ராஷி கன்னா

post image

நடிகை ராஷி கன்னா தமிழில் 'தர்மன்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதைத் தாண்டி பாலிவுட்டிலும் பெரிய லைன்-அப்பை அவர் கையில் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் 'தர்மன்' திரைப்படம் தொடர்பாகவும், ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது குறித்தும், தன்னுடைய 13 ஆண்டுகால கரியர் குறித்தும் பேசியிருக்கிறார்.

raashi kanna | ராஷி கன்னா
raashi kanna | ராஷி கன்னா

'தர்மன்' படம் பற்றி அவர், "ரஜினிகாந்த் சாருடன் இணைந்து நடிப்பது மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கிறது. படப்பிடிப்பின் போது அவர் எனக்கு ஒரு நண்பர் போல ஆகிவிட்டார்.

அவரிடம் நான் நிறையப் பேசுவேன், அடிக்கடி கேள்விகள் கேட்டுத் தொந்தரவு செய்து கொண்டே இருப்பேன். அந்த அளவுக்கு அவரிடம் சகஜமாக உணர்கிறேன். மிகவும் எளிமையான மனிதர் அவர்.

அவருடன் இருக்கும்போது ஒரு குழந்தையைப் போல உணர்கிறேன். படப்பிடிப்புத் தளத்தில் இருப்பதை மிகவும் ரசிக்கிறேன்" எனப் பேசியிருக்கிறார்.

தன்னுடைய 13 ஆண்டுகால கரியர் பற்றி அவர், "ஆரம்பகாலத்தில் எனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு நடித்து வந்தேன்.

ஆனால் இன்று, எதற்குச் சரி சொல்ல வேண்டும், எதற்கு நோ சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன். ரசிகர்களும் நடிகர்களிடமிருந்து சில விஷயங்களை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

ராஷி கன்னா
ராஷி கன்னா

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைத் தொடர்ந்து செய்ய முடியாது. ஒரு நடிகராக நம்மை நாமே தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, நடிப்புத் திறனை மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும். முன்பை விட இப்போது நடிப்பின் மீது நான் அதிக அக்கறையுடன் இருக்கிறேன்" என்றார்.

மாநாடு : ஆடுபுலி ஆட்டம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 43

`சினி'ஸ்கோப் 43மாநாடு : ஆடுபுலி ஆட்டம்!அப்துல் காலிக் எனும் இளைஞனின் நண்பன் ஈஸ்வரன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால், அந்தப் பெண்ணுக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது. அங்கிருந்து அந்தப் பெண்ணைக் கூட்டிக... மேலும் பார்க்க

Samantha: ''எங்கள் இதயங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியில்...'' - ஆண் குழந்தைக்கு தாயான சமந்தா

நடிகை சமந்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. Samantha - Raj Nidimoruதிருமணத்திற்குப் பிறகு, இந்தாண்டு ஜூன்... மேலும் பார்க்க

Appa Kutty Review: அப்பா - மகள் பாசக்கதையில் மருத்துவ மற்றும் உறவுச் சிக்கல்கள்! நெகிழ வைக்கிறதா?

சென்னையிலிருந்து கைக்குழந்தையான மகளோடு ஊட்டிக்கு வரும் சூர்யா (விஜய் ஆண்டனி), லொக்கேஷன் மேனேஜராகப் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். ஒற்றையாளாகத் தன் மகள் தியாவை (லிதன்யா) வளர்க்கும் சூர்யாவைப் பார்த்... மேலும் பார்க்க

O.M Review: பிரமாண்ட செம்மரக் கடத்தல் உலகம்; களமிறங்கும் உளவாளி தனுஷ்! மிஷன் சக்சஸா?

செம்மரக் கடத்தல் குழுவை ஒட்டுமொத்தமாகப் பிடிக்கும் தடுப்புப் பிரிவுக்குச் சிறப்புக் காவல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் நித்யா ரெட்டி (சாய் பல்லவி). இதற்காக 'O.M' (Operation Mole) எனப்படுகிற ஆபரேஷனைத... மேலும் பார்க்க

ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநரின் பேத்தியை மணந்தார் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் அஸ்வின்!

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அஸ்வின் குமார். இதனைத்தொடர்ந்து கதாநாயகனாக ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தில் நடித்தார். தவிர ‘செம்பி’, ‘ஓ காத... மேலும் பார்க்க