செய்திகள் :

EPFO SWP: ஓய்வுக்குப் பிறகு PF பணத்தை தவணையாகப் பெறலாம்; வட்டியும் தொடரும்! 3 ஆப்ஷன்கள் என்ன?

post image

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஓய்வுக்குப் பிறகு பி.எஃப். சேமிப்புத் தொகையை மொத்தமாக எடுப்பதற்குப் பதிலாக, தவணை முறையில் பெற்றுக்கொள்ளும் வகையில் Systematic Withdrawal Plan-க்கு (SWP) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் புதிய வசதியின் கீழ், ஓய்வுபெற்றவர்கள் தங்களது சேமிப்பிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதே சமயம், கணக்கில் மீதமிருக்கும் பி.எஃப். தொகைக்கு வழக்கமான இ.பி.எஃப். வட்டி விகிதத்தில் தொடர்ந்து வட்டி கிடைத்துக்கொண்டே இருக்கும்.

உதாரணத்திற்கு, ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது அவரது பி.எஃப். கணக்கில் ரூ.30 லட்சம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

பணம்
பணம்

அவர் அந்த முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுப்பதற்குப் பதிலாக, சிறிய தவணைகளாகப் பிரித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

இது மூன்று வகைப்படுகிறது.

ஒன்று, பி.எஃப். சேமிப்பைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் (மாதந்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை) தொடர்ந்து பெற்றுக்கொள்வது,

இன்னொன்று, ஒரு குறிப்பிட்ட தொகையை உடனடியாக மொத்தமாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையைத் தவணை முறையில் பெறுவது,

மற்றொன்று, அசல் தொகையை அப்படியே முதலீட்டில் வைத்துவிட்டு, அதற்குக் கிடைக்கும் வட்டியை மட்டும் எடுத்துக்கொள்வது.

கணக்கில் மீதமிருக்கும் பி.எஃப். இருப்புத் தொகைக்குத் தொடர்ந்து வட்டி வழங்கப்படும்.

2025-26 நிதியாண்டிற்கான இ.பி.எஃப். வட்டி விகிதமாக 8.25 சதவிகிதம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பணம் பெறும் காலகட்டத்தில் குறிப்பிட்ட நபர் உயிரோடு இல்லையென்றால், விதிகளுக்கு உட்பட்டு அவரது வாரிசுதாரர் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் மீதமுள்ள தொகையை மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.

பி.எஃப்
பி.எஃப்

எப்போது நடைமுறைக்கு வருகிறது?

இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் தான் வழங்கப்பட்டுள்ளதே தவிர, இன்னும் இது நடைமுறைக்கு வரவில்லை.

இந்தத் திட்டத்தில் பணம் எடுக்கும் நடைமுறை, பணம் வழங்கப்படும் கால இடைவெளி மற்றும் குறைந்தபட்ச இருப்புத் தொகை ஆகியவற்றைப் பற்றி இன்னும் சொல்லவில்லை.

இந்தப் புதிய எஸ்.டபிள்யூ.பி. வசதி பி.எஃப். சேமிப்புத் தொகைக்கு மட்டும்தான். ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் கிடைக்கும் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு இது பொருந்தாது.

40+ வயதில் முதலீட்டைத் தொடங்க இருக்கீங்களா? NRI-களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

"முதலீடு செய்யத் தாமதமாகிவிட்டதே!" என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா? வெளிநாட்டில் (NRI) பணிபுரியும் பலருக்கும், குடும்பப் பொறுப்புகள், கடன்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக 20 அல்லது 30 வயதில் மு... மேலும் பார்க்க

பி.எஃப்: இனி 90% பணத்தை 55 வயதுக்குள் திரும்ப எடுக்கலாம்! மாறிய புதிய விதிமுறைகள் சாதகமா, பாதகமா?

பணியாளர் ஓய்வுக் கால விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது எம்ப்ளாயிஸ் பென்ஷன் ஃபண்ட் நிறுவனம். ஒரு பணியாளர் 55 வயதில் தனது பி.எஃப் கணக்கில் இருக்கும் 90% பணத்தைத் திரும்ப எடுக்கலாம்... மேலும் பார்க்க

உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி... வருகிறது லாபம் 'மணி கிளினிக்'!

SIP தொடங்கிவிட்டீர்கள். மாதந்தோறும் பணமும் செலுத்துகிறீர்கள். ஆனால் சந்தை 10% சரிந்தால் என்ன செய்வது என்று தெரியுமா? கையில் ₹5 லட்சம் இருந்தால் மொத்தமாக முதலீடு செய்வதா, அல்லது SIP முறையில் முதலீடு செ... மேலும் பார்க்க

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கான பணத்தைச் சேர்க்க மிகச் சிறந்த வழி எது தெரியுமா?

நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவைப்படும் என்று நினைத்து நாம் பல வகையில் பணம் சேர்க்கிறோம். 'நாம் இருக்கிற வரை நமக்கு; நமக்குப்பின் நம் குழந்தைகளுக்கு...' என்று நினைத்து, வீடு வாங்குகிறோம். 'இப்... மேலும் பார்க்க

ஓய்வுக்காலத்திற்கு EPF மட்டும் போதுமா? இவற்றையும் மனசில் வெச்சு செயல்படுங்க!

மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய நம்பிக்கையே ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் (EPF - Employee's Provident Fund) தொகைதான். "நமக்குத்தான் பி.எஃப் இருக்... மேலும் பார்க்க