செய்திகள் :

``அவருடைய சிந்தனைகளே என்னை ஊக்கப்படுத்தின" - TIME 100 Next India பட்டியலில் இடம்பெற்றது பா.ரஞ்சித்

post image

அமெரிக்காவின் புகழ்பெற்ற 'டைம்' (TIME) இதழ், தனது 103 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கான பிரத்யேக சர்வதேசப் பட்டியலான 'டைம் 100 நெக்ஸ்ட் இந்தியா' (TIME100 Next India) பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஏழு மாத காலத் தீவிரப் பணிகளுக்குப் பிறகு, நேற்று (நவம்பர் 19-ம் தேதி) அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் துல்கர் சல்மான், சாய் பல்லவி, பார்வதி, இசையமைப்பாளர் அனிருத், தெருக்குரல் அறிவு, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருக்கின்றனர்.

இயக்குநர் பா.ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித்

இது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், ``TIME 100 Next India பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை எண்ணி மிகவும் பணிவும், ஆழ்ந்த நன்றியுணர்வும் கொள்கிறேன். இந்தப் பயணம் ஒருபோதும் என்னுடையது மட்டுமாக இருந்ததில்லை. எண்ணற்ற மனிதர்கள், பகிரப்பட்ட கனவுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் என் குழுவினர், சக படைப்பாளிகள், கலைஞர்கள் என என்னுடன் துணைநின்று என் படைப்புகளின் மீது நம்பிக்கை வைத்த அனைவரின் அசைக்க முடியாத ஆதரவாலும் செதுக்கப்பட்டது.

இந்த அங்கீகாரம் நம் அனைவருக்குமானது. எல்லாவற்றுக்கும் மேலாக, புரட்சியாளர் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றிகள். சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூக நீதிக்கான அவரின் தொலைநோக்குப் பார்வையும், சிந்தனைகளும், வாழ்நாள் போராட்டமுமே என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி என் பயணத்தை வழிநடத்துகின்றன. என் பயணத்தை மிகுந்த அன்போடும் ஆழமான புரிதலோடும் பதிவு செய்த நடிகர் ஆர்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். தெருக்குரல் அறிவு, கிரேஸ் பானு மற்றும் மீனா கந்தசாமி ஆகியோருடன் இந்தத் தருணத்தைப் பகிர்ந்து கொள்வது பெருமையாக உள்ளது. கடந்து வந்த பயணத்திற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இனி செய்ய வேண்டிய பணிகளில் முன்பை விடவும் அதிக உறுதியுடன் ஈடுபடுவேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Dhanush: "நான் Chef ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்; ஆனால்..." - தனுஷ் ஷேரிங்

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓம்' படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நேற்று (நவ.19) 'CNN-News18' ஊடகம் நடத்திய விருது விழாவில் 'Indian Of The Year 2026' விருது தனுஷிற்கு வழங்கப்பட்டிருக... மேலும் பார்க்க

OM: ``'ஓம்' என்று தலைப்பு வைக்கக் காரணம் இதுதான்"- ராஜ்குமார் பெரியசாமி

‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓம்’. செம்மர கட்டை கடத்தல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை... மேலும் பார்க்க

Keerthy Suresh: ``ஒருபோதும் நமது கலாசாரத்தைத் தாழ்த்திப் பேச மாட்டேன்" - நடிகை கீர்த்தி சுரேஷ்

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் தொடர் 'அக்கா'. கீர்த்தி சுரேஷ் பவானியாகவும், ராதிகா ஆப்தே ருத்ராவாகவும் நடித்திருக்கும் இந்த சீரிஸ... மேலும் பார்க்க

Keerthy Suresh: ``அப்பா - பொண்ணு உறவுனு சொன்னது கேட்கலையா?"- விமர்சனங்களுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந... மேலும் பார்க்க

'வீடியோ க்ளிப்பைப் பார்த்து தனுஷ் சாரின் குணத்தை..!'- செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் விளக்கம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். நவம்பர் 20 ஆம் தே... மேலும் பார்க்க