செய்திகள் :

'அவரை அடக்குங்க முதல்ல...' - மாநகராட்சி கூட்டத்தில் மோதிய சேகர் பாபு - தவெக எம்.எல்.ஏ தாமு!

post image

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்க மேயர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட கூட்டம் ரிப்பன் பில்டிங்கின் அம்மா மாளிகையில் நடந்திருந்தது. அதில், திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு பேசுகையில் தவெக எம்.எல்.ஏ தாமு கமெண்ட் அடிக்க மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டம்
மாநகராட்சி கூட்டம்

வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கவிருக்கிறது. மழை குறித்த முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்க சிறப்புக் கூட்டம் ஒன்று ரிப்பன் பில்டிங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ், சேகர்பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை பற்றி சேகர் பாபு மைக்கில் பேசுகையில் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ராயபுரம் தவெக எம்.எல்.ஏ தாமு, 'சீக்கிரம் பேசி முடிங்க. நீங்க பேசுறது போர் அடிக்குது' என கமெண்ட் அடித்தார். உடனே ஆவேசமான சேகர் பாபு, 'நான் பேசுறது போர் அடிக்குதா...அப்ப எதுக்கு என்னைய கூப்பிட்டீங்க? ஜனநாயகத்தை மதித்து என்னை அழைத்தீர்கள். நான் வந்தேன். நான் அநாவசியமாக பேசுகிறேனா....நீங்கள் என்னை கூப்பிடாமலேயே இருந்திருக்கலாமே?

சேகர் பாபு - தாமு
சேகர்பாபு - தாமு

நானும் அமைச்சராக இருந்தவன்தான். ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தவன்' என வேகமெடுத்தார். உடனே அமைச்சர் ஆதவ், 'நீங்கள் பேசுங்கள்...' என்று கூற, 'அவரை முதலில் அடக்குங்கள்' என தாமுவை நோக்கி கூறினார்.

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவும் மோதிக்கொண்டதால் மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மின் கொள்முதல்: ``கூடுதல் செலவானாலும் மின்சாரம் வாங்க காரணம் இதுதான்" - அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு அரசியலில் மின்சாரத்துறை ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்கவிருக்கும் செய்தி பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட... மேலும் பார்க்க

'ரசிகர் மன்றம் டு நற்பணி இயக்கம்; புதிய கொடி அறிமுகம்!' - கோவையில் தனுஷின் அடுத்த மூவ்!

நடிகர் தனுஷின் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி இயக்கம் என பெயர் மாற்றியிருக்கின்றனர். கோவையில் நடந்த மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தனுஷ் அரசியலுக்கு அ... மேலும் பார்க்க

வெங்காயம் சரியில்லையென ஊழியர் சஸ்பெண்ட்; கொதித்தெழுந்த ரேஷன் பணியாளர்கள் - பின்வாங்கிய அரசு!

தரமற்ற வெங்காயத்தை மக்களுக்கு வழங்கியதாக நியாயவிலைக் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் போராட்டம் அறிவித்ததை அடுத்து, 24 மணி நேரத்தில் அந்த உத்தரவு ரத்த... மேலும் பார்க்க

'நான் முதல்வர் விஜய்யை பாராட்டவே இல்லை!' - வழக்கிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற நீதிபதி!

உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் தமிழக முதல்வர் விஜய் மிகச்சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியதாக தவெகவினர் சமூகவலைதளங்களில் பரப்பி வரும் நிலையில், அந்த நீதிபதி முதல்வர் விஜய்யை தான் பாராட்டவே இல்லை என... மேலும் பார்க்க

``மின்சாரக் கொள்முதல் முதல் சாலை டெண்டர் வரை... இது டம்மி அரசு" - தவெக அரசைச் சாடும் எடப்பாடி

செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித... மேலும் பார்க்க

``வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் போல அமைச்சரவை..." - தவெக அரசை சாடும் ஸ்டாலின்!

வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தவெக அரசின் நிர்வாகம் குறித்த... மேலும் பார்க்க