செய்திகள் :

'ரசிகர் மன்றம் டு நற்பணி இயக்கம்; புதிய கொடி அறிமுகம்!' - கோவையில் தனுஷின் அடுத்த மூவ்!

post image

நடிகர் தனுஷின் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி இயக்கம் என பெயர் மாற்றியிருக்கின்றனர். கோவையில் நடந்த மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தனுஷ் அரசியலுக்கு அச்சாரம் இடுகிறார் என பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவரின் இந்த மூவ் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Dhanush
Dhanush

இதுதொடர்பாக தனுஷ் மன்றத்தின் மாநில நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம், 'தலைவரின் படத்துக்கு முன்பாக நடக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவை எப்போதும் சிறப்பாக நடத்துவோம்.

அந்த ஆடியோ விழா பற்றி ஆலோசிக்க எப்போதும் சென்னையில்தான் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவோம். ஆனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என ஓம் படத்தின் ஆடியோ விழா குறித்து ஆலோசிக்க கோவையில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினோம். இப்போது வரை எங்களின் மன்றத்தை 58 மாவட்டங்களாக பிரித்திருக்கிறோம்.

Dhanush
Dhanush

58 மாவட்டங்களின் தலைவர்கள் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் என 2500 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் ஓம் படத்தின் ஆடியோ விழா பற்றியும் அடுத்தக்கட்ட நலத்திட்ட நிகழ்வுகள் பற்றியும் முக்கியமாக பேசினோம். தலைமையின் உத்தரவின் பேரில் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம் என்பதை தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றியிருக்கிறோம். மன்றத்தின் கொடியிலும் சில மாற்றங்களை செய்து புதிய கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். ரசிகர்களை மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் சமூகப் பணிகளை நோக்கி நகர்த்த இது உதவுமென நம்புகிறோம். மிக கவனமாக ரசிகர்களை நல்வழிப்படுத்தும்படி கட்டமைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்' என்றனர்.

மின் கொள்முதல்: ``கூடுதல் செலவானாலும் மின்சாரம் வாங்க காரணம் இதுதான்" - அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு அரசியலில் மின்சாரத்துறை ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்கவிருக்கும் செய்தி பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட... மேலும் பார்க்க

வெங்காயம் சரியில்லையென ஊழியர் சஸ்பெண்ட்; கொதித்தெழுந்த ரேஷன் பணியாளர்கள் - பின்வாங்கிய அரசு!

தரமற்ற வெங்காயத்தை மக்களுக்கு வழங்கியதாக நியாயவிலைக் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் போராட்டம் அறிவித்ததை அடுத்து, 24 மணி நேரத்தில் அந்த உத்தரவு ரத்த... மேலும் பார்க்க

'நான் முதல்வர் விஜய்யை பாராட்டவே இல்லை!' - வழக்கிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற நீதிபதி!

உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் தமிழக முதல்வர் விஜய் மிகச்சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியதாக தவெகவினர் சமூகவலைதளங்களில் பரப்பி வரும் நிலையில், அந்த நீதிபதி முதல்வர் விஜய்யை தான் பாராட்டவே இல்லை என... மேலும் பார்க்க

``மின்சாரக் கொள்முதல் முதல் சாலை டெண்டர் வரை... இது டம்மி அரசு" - தவெக அரசைச் சாடும் எடப்பாடி

செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித... மேலும் பார்க்க

``வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் போல அமைச்சரவை..." - தவெக அரசை சாடும் ஸ்டாலின்!

வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தவெக அரசின் நிர்வாகம் குறித்த... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே பணவீக்கத்தில் 'தமிழ்நாடு' முதலிடம்; ஏன் தமிழ்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயருகிறது?

நேற்று முன்தினம் (அக்டோபர் 12), மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 4.83 சதவிகிதமாக இருந்த இந்தியாவி... மேலும் பார்க்க