செய்திகள் :

'ஆண்களை முந்திய பெண்கள்' - Start-up நிறுவனங்கள் நடத்துவதில் சாதனை; இந்தியளவில் தமிழ்நாடு முன்னிலை!

post image

தமிழகத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் புத்தொழில் (Startup) நிறுவனங்களைத் தொடங்கி சாதித்து வருகின்றார்கள் என்ற தகவல் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப்-கள்
பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப்-கள்

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையால் (Department For Promotion Of Industry and Internal Trade) அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழகம் சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 15,037 ஆக உயர்ந்து இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது.

அதிலும் தமிழ்நாட்டில் பெண் தொழில் முனைவோரின் பங்களிப்பு ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தொழில்துறை தரவுகளின்படி பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிககை 7,572 ஆகவும், ஆண்களால் நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை 7,465 ஆகவும் உள்ளன. இதன் மூலம் பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப்-கள் கூடுதலாக உள்ளன.

ஸ்டார்ட் அப்
ஸ்டார்ட் அப்

இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சமூகத்திலும், மற்ற துறைகளிலும் பாலினச் சமத்துவம் மெதுவாக உயர்ந்து வரும் நிலையில் ஸ்டார்ட் அப் துறையில் பாலின சமத்துவம் வேகமாக அதிகரித்து வருகிறது.

ஸ்டார்ட் அப் நிறுவன வளர்ச்சியில் தமிழகத்தின் மூன்றில் ஒரு பங்கு என்ற கணக்கில் 5,134 ஸ்டார்ட் அப்-களுடன் சென்னை வட்டாரம் தொடர்ந்து முதல் இடத்திலும், 2011 என்ற எண்ணிக்கையில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 1,318 என்ற எண்ணிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

திருவள்ளூர்- 916, செங்கல்பட்டு - 815, மதுரை - 497, திருச்சி - 446, சேலம் - 403, ஈரோடு - 350, கிருஷ்ணகிரி - 239 என்ற எண்ணிக்கையில் மற்ற மாவட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நோயல் டாடா உடன் விரிசல்; 'முன்னெச்சரிக்கை'யாக போட்டியிலிருந்து விலகிய N.சந்திரசேகரனின் சாதனைகள்!

ஒன்பது ஆண்டுகள்... இரண்டு பதவிக்காலத்தை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கழித்துள்ள என்.சந்திரசேகரன் அடுத்த தலைவர் பதவிக்கால போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை. இது தான் இந்திய பிசினஸ் உலகத்தின் தற்போத... மேலும் பார்க்க

Tata Sons-ன் அடுத்த தலைவர் 'இவரா?' - அடிபடும் பேச்சுகள்; தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாகிறது. மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிப்போட போவதில்லை என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்த... மேலும் பார்க்க

`நான் ஏன் Tata Sons தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்?' - N சந்திரசேகரன் முழு விளக்கம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதிலிருந்து விலகுகிறார் N.சந்திரசேகரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், 2017-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர... மேலும் பார்க்க

`ஆடி கொடைக்கு ஆயிரங்கண் பானையும், தீச்சட்டியும் ரொம்ப விசேஷம்' - கவனம் ஈர்க்கும் மண்பாண்ட பொருள்கள்

மண் கலயங்களின் விற்பனைதென் மாவட்டங்களில் ஆடி மாத கொடை விழாக்களை அலங்கரிக்கும் மண் கலயங்களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆடி மாதம் பெரும்பாலான அம்மன் மற்ற... மேலும் பார்க்க

LIC : 6.5 சதவீத பங்குகளை விற்று ரூ.35,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு

மத்திய அரசு ஏற்கனவே பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்துவிட்டது. இப்போது எல்.ஐ.சி., ஒ.என்.சி.ஜி போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தற்போது எல்.ஐ.சி.யி... மேலும் பார்க்க