செய்திகள் :

``ஆத்திரத்தில் அதிமுக-வை உடைத்து சின்னாபின்னமாக்கி வருகிறது தவெக!" - அப்பாவு சொல்வது என்ன?

post image

சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெக ஆதரவு அதிமுக அணி ஒன்று உருவானது. அந்த அணியை முதல்வர் விஜய் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாக பிரிந்து, பின் இணைந்தது. ஆனால், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக முக்கியப் பிரமுகர்கள் தொடர்ந்து தவெக-வில் இணைந்து வருகின்றனர். அதன் அடிப்படையில், நேற்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று த.வெ.க-வில் இணைந்தனர்.

சி.வி.சண்முகம் வீட்டில் விஜய்
சி.வி.சண்முகம் வீட்டில் விஜய்

இது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க திமுக தலைவர் முயற்சி செய்கிறார் என்று திட்டமிட்டு சிலர் விஷம பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்த மறுகணமே நாங்கள் எதிர்கட்சியாக செயல்படுவோம், த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு திமுக முட்டுக்கட்டை போடாது என்று சொன்ன வார்த்தையை திமுக தலைவர் இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.

ஆனால் நடந்த உண்மை தேர்தல் முடிவுகள் வந்த நாள் இரவே அதிமுகவின் ஆதரவை த.வெ.க கோரியதாகவும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சில நிபந்தனைகள் விதித்ததாகவும் அதனை ஏற்காத தவெக ஆத்திரத்தில், அதிமுகவை உடைத்து சின்னாபின்னமாக்கி வருவதாகவும் சமூக வலைத் தளங்களிலும் பொது வெளியிலும் பேசப்பட்டு வருகிறது.

அப்பாவு
அப்பாவு

இந்த உண்மைகளை ஒட்டுமொத்தமாக மறைத்து விட்டு தமிழக முதல்வர் அவர்கள் அதிமுக எம்எல்ஏக்கள், கல்லாப் பெட்டி எம்.எல்.ஏக்கள், அமமுக எம்.எல்.ஏ, தற்போது ஆதரவு கொடுத்துவரும் கட்சி எம்.எல்.ஏக்கள், வைகோ அவர்களுடைய பத்திரிகை வாக்குமூலம் மற்றும் தொடர்ந்து அதிமுகழக எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய சொல்லி கட்சியில் சேர்த்து கொண்டிருப்பது வரை த‌.வெ.க குதிரை பேரங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இத்தொடர் குற்றங்களை விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, கரூரில் 41-பேர் இறந்ததற்கு CBI விசாரணை கேட்டதுபோல், இதற்கும் CM-sir CBI விசாரணை கேட்பீர்களா ? அல்லது தமிழக காவல்துறையை ஏவி எதிர்கட்சிகளை மிரட்டுவீர்களா?" எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கடலூர்: மாநகராட்சிக் கூட்டத்தில் தலைவர்களின் போட்டோ அட்ராசிட்டி! - கவுன்சிலர்களால் நொந்து போன மேயர்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடலூர் மாநகராட்சியில் முதல் கூட்டம் நேற்று நடந்தது. புதிய ஆணையர் கிஷன்குமார் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்திற்கு தி.மு.க-வைச் சேர்ந்த மேயர் சுந்தரி தலைமை தாங்கினார்.... மேலும் பார்க்க

`இயக்கம் அழிந்தால்கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டுமென..'- அதிமுகவிலிருந்து வைகைச்செல்வன் விலகல்

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், " அனைத்திந்திய அண்ணா தி... மேலும் பார்க்க

"ஆணவம் அழிவிற்கு வழி!"- திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொட... மேலும் பார்க்க

`என் கார்ல வருகிறேன்' - அனிதா ராதாகிருஷ்ணன்; `போலீஸ் வாகனத்துல ஏறுங்க.!' - கைதின் போது நடந்தது என்ன?

திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா... மேலும் பார்க்க

இப்போதே முன்னிறுத்தப்படும் ராகுல்: காங்கிரஸின் `இருபக்க கூர் கத்தி' கை கொடுக்குமா? கையை கிழிக்குமா?

'ராகுல் காந்திதான் எங்கள் பிரதமர் வேட்பாளர்'2029 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், தேசிய அரசியலில் அதற்கான காய்நகர்த்தல்கள் தற்போதே தொடங்கிவிட்டன. குறிப்பாக, காங்கிரஸ்... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்... மேலும் பார்க்க