செய்திகள் :

ஆபாசக் குறுஞ்செய்தி? ``ஆட்சியரே புகார் அளித்தால்தான் நடவடிக்கையா?" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

post image

பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்திகரமாக இல்லை. ஏராளமானோர் காணாமல் போகிறார்கள், குறிப்பாக குழந்தைகள் பலர் காணாமல் போகும் சூழல் நிலவுகிறது. அமைச்சர்கள் ஆளுக்கொரு கதையாக முரண்பாடாகப் பேசுகிறார்கள். இந்த ஆட்சி எவ்வாறு இருக்கிறது? என்று நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள்..." எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிரித்துக்கொண்டே, ``மின்வெட்டு குறித்துப் பேசவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன்.

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்

இந்த ஆட்சி எப்படி இருக்கிறது என்ற Current situation-ஐ, நான் பதில் சொல்வதற்கு முன்பாகவே, கரண்டே சொல்லிவிட்டது. அதேநேரம் கடந்த திமுக ஆட்சியுடன் இதை ஒப்பிடவும் முடியாது.

ஐந்து ஆண்டு கால ஆட்சிக்கும் ஆறு மாத கால ஆட்சிக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. எனவே, இந்தக் குறுகிய கால ஆட்சியை வைத்து உடனடியாக எந்த முடிவிற்கும் வந்துவிட முடியாது. இருப்பினும், பொதுமக்கள் எதிர்பார்க்கும் வகையில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இல்லை என்பது உண்மை.

அதே நேரத்தில், மக்கள் எதிர்பார்க்கும் வகையில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள். ஆனால், சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அனுபவம் குறைவாக உள்ள இளம் உறுப்பினர்கள் அனைவரும் அமைதி காத்து, தங்களின் செயல்பாடுகளைத் திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும். முதலமைச்சரின் வழிகாட்டுதல் கூட்டம் அவர்களுக்கு உரிய பாதையைக் காட்டும் என்று நான் நம்புகிறேன்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது தொடர்பாக அவரே நேரடியாகப் புகார் அளித்தால் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இந்த அணுகுமுறையில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்கள் அனைவரும் உடனடியாக நேரடியாக வந்து புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தவறுதலாக யாரையும் குற்றம் சாட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றாலும், அதற்காக பெண்கள் தாமாக வந்து புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது சரியான நிலைப்பாடு அல்ல.

மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் கூட, சில சமயங்களில் சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் இருக்கவே செய்யும். அனைவரும் தயக்கமின்றி முன்வந்து பேசுவார்கள் என்று சொல்ல முடியாது. ஜெம் வீரமணி வழக்கில்கூட போதிய ஆதாரம் இல்லை என்ற காரணத்தைக் கூறித்தான் முந்தைய ஆட்சியில் தப்பிக்க விட்டார்கள். பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களின் புகாருக்குரிய ஆதாரங்களைத் தாங்களே திரட்டிக்கொண்டு வர முடியுமா? எனவே, ஆதாரங்கள் இல்லை என்றோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்களே நேரடியாக வந்து புகார் அளிக்கவில்லை என்றோ காரணங்களைக் கூறாமல், பெண்களுக்கு எவ்வித பாலியல் தொல்லைகள் நேர்ந்தாலும் அதில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மிகத் தீவிரமான அணுகுமுறை அவசியம் என்று நான் கருதுகிறேன்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'சந்திக்கும்போது முகத்தைத் திருப்பிக்கொள்வார்'- மோடியைப் பற்றி சோனியா காந்தி என்ன எழுதியிருக்கிறார்?

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது புதிய நினைவுக்குறிப்பு நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey Of Love) என்ற புத்தகத்தை நேற்று வெளியிட்டார். அதில் தனது அரசியல் பயணம் மற்று... மேலும் பார்க்க

`சீன பெண் ஏஜென்ட்டுடன் திருமணம் மீறிய உறவு?'- ஆட்டம் கண்ட Nvidia தலைவரின் சாம்ராஜ்யம்; என்ன நடந்தது?

உலகப் புகழ்பெற்ற ‘என்விடியா’ (Nvidia) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி சிப் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங். இவர் தனது மனைவி லோரி ஹுவாங்கை திருமணம... மேலும் பார்க்க

PIN Code-ல் தேவநாகரி எண்கள்? ``மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை எதிர்ப்போம்"- சு.வெங்கடேசன்

இந்திய அஞ்சல்துறையின் அஞ்சல் குறியீட்டு எண்களுக்குப் பதிலாக தேவநாகரி எண்கள் பயன்படுத்தப்பட்டதாக சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில்,... மேலும் பார்க்க

ஈரான் போருக்கு முக்கியமான Pete Hegseth! கார்னர் செய்யும் US நாடாளுமன்றம்; ட்ரம்ப் 'விடாப்பிடி' ஆதரவு

பீட் ஹெக்செத் - ஈரான் போரில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எவ்வளவு பங்குண்டோ, அதை விட ஒரு படி அதிகமாக இவருக்கு உண்டு. யார் இவர் என்று கேட்கிறீர்களா? இவர்தான் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர்.ஈரான் போ... மேலும் பார்க்க

SIR: ``யாரையெல்லாம் பட்டியலிலிருந்து நீக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள்" - டி.எம் கிருஷ்ணா

இந்தியாவின் மாபெரும் சிக்கலுக்குரிய விஷமாக மாறியிருப்பது எஸ்.ஐ.ஆர். எதிர்க்கட்சிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராகக் குரலெழுப்பி வருகின்றனர். அதன் அடிப்படை... மேலும் பார்க்க

``TVK MLA அருள் விக்னேஷ் பாவம்... வதந்திகளை வைத்து கேள்வி எழுப்புவது சரியல்ல" - மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம், துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரம் உள்ளிட்ட... மேலும் பார்க்க