செய்திகள் :

"இடம் மாறியதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை" - ஓபிஎஸ் vs செங்கோட்டையன் காரசார விவாதம்

post image

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் விவாதத்தின்போது பேசிய தி.மு.க எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வம், "ஆயிரம் கைகளை நீட்டி ஆதவனை மறைப்பதைப் போல மகளிர் உரிமைத் தொகையின் பெயரை மாற்றியிருக்கிறார்கள்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

மகளிர் உரிமைத் தொகை உயரும் என எதிர்பார்த்து மகளிர் ஏமாந்து போயிருக்கின்றனர். நல்லதும் மாற்றம்தான் கெட்டதும் மாற்றம்தான். மக்கள் எதிர்பார்த்து வாக்களித்து ஏமாந்து போயிருக்கின்றனர்.

தேர்தல் அறிக்கையைத் தங்களின் முன்னோடி திட்டமாக தவெக அறிவித்தது. அந்த அறிவிப்புகளைககூட நிறைவேற்றாததால் மக்கள் ஏமாந்து நிற்கின்றனர்" என்று பேசியிருக்கிறார்.

அதற்கு செங்கோட்டையன், "திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டு கால அவகாசம் இருக்கிறது. மூன்றே மாதங்களில் சரித்திரம் படைக்க முடியாது. தமிழகமே பாராட்டும் தூய ஆட்சியைப் பற்றி ஏமாற்றத்திற்குரிய ஆட்சி என விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இடம் மாறியிருப்பதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை" என்று கூற, "இடத்தை முதலில் மாற்றியது செங்கோட்டையன்தான்" என்று ஓபிஎஸ் பதில் அளித்திருக்கிறார்.

இருவருக்கும் இடையேயான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "செங்கோட்டையன் அவர்கள் இடம் மாறினாலும் அவர் இதயத்தில் இருக்கும் படத்தை தலைவர் மாற்ற சொல்லவில்லை. அண்ணனுடைய பாக்கெட்டைப் பார்க்கையில் இடமும் மாறியிருக்கிறது இதயமும் மாறியிருக்கிறது" என்றிருக்கிறார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

தொடர்ந்து, "செங்கோட்டையன் அண்ணன் இடம் மாறினாலும் அவர் இதயத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் படமே இருக்கிறது. ஆனால், அம்மாவால் முதல்வராக்கப்பட்டவரிடம் சட்டையில் யார் படம் இருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச, "பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், அம்மா இவர்களையெல்லாம் நாங்கள் கடைசி வரை நெஞ்சில் வைத்திருப்போம். படத்தைக் காட்டி ஏமாற்றும் பழக்கம் எங்களுக்கில்லை.

உங்களோடு (செங்கோட்டையன்) நான் இணைந்து பயணித்திருக்கிறேன். என்னைப் பற்றி உங்களுக்கு 200% தெரியும். எந்த நிலையிலும் மாற மாட்டேன். திராவிட இயக்கங்களுக்குள்தான் சுற்றி சுற்றி வந்திருக்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகாலமாக தமிழகத்தின் உரிமைகளை எந்நாளும் விட்டுக்கொடுக்கமாட்டேன் எனப் போராடிய முன்னாள் முதல்வருக்கு நன்றி சொல்லும் வகையில்தான் அவர் படத்தை பையில் வைத்திருக்கிறேன்" என்று ஓ.பி.எஸ் பதிலளித்திருக்கிறார். இப்படி ஒவ்வொருத்தரும் மாறி மாறி விவாதிக்க சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடந்திருக்கிறது.

பெரியார் புலிகள் காப்பகத்தில் ட்ரோன்; தமிழகக் குழுவால் சர்ச்சை! - கேரள வனத்துறை எடுத்த முடிவு

விவசாயத் தேவைகளுக்காக முல்லைப் பெரியார் அணையின் மதகுகளைத் தமிழ்நாடு அரசு கடந்த 8-ம் தேதி திறந்தது. இதனையொட்டி, தமிழக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்ட... மேலும் பார்க்க

பஞ்சாப்: ஹர்பஜன் சிங் பகிர்ந்த `ஜோம்பி போதை இளைஞர்கள்' வீடியோ; ஆம் ஆத்மி அரசு பதிலடி!

பா.ஜ.க எம்.பி ஹர்பஜன் சிங் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த விடியோவில் டர்பன் அணிந்த சிலர் சாலையோரத்தில் நிலைகுலைந்து, நிற்க முடியாமல் தடுமாறுகின்றனர். அந்த வீடியோவைப் பகிர்... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து: "இந்தப் போக்கு தொடரவேண்டும்!" - தவெக அரசை பாராட்டும் கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடங்குவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றும் வகையில் ஆளும் பாஜக அரசு அறி... மேலும் பார்க்க

TN Assembly:``இடம் மாறியிருப்பதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை!" - ஓ.பி.எஸ்ஸுக்கு செங்கோட்டையன் பதிலடி| Live

``இடம் மாறியிருப்பதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை." - செங்கோட்டையன்``திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டு கால அவகாசம் இருக்கிறது. மூன்றே மாதங்களில் சரித்திரம் படைக்க முடியாது." - ஓ.பி.எஸ்ஸூக்கு செங்க... மேலும் பார்க்க

``தமிழ் மீதான தவறான விமர்சனத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும்" - அமைச்சர் மரிய வில்சனைச் சாடும் பாஜக

நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் மரிவில்சன், ''நான் பிறப்பால் கிருஸ்தவன். என் மதம் எனக்கு அன்பு, கருணை, இரக்கத்தின் மொழியைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இது தமிழ் படித்... மேலும் பார்க்க