அவசரநிலை: சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.20,000; ஒடிசா அரசு
இணையவழி லாட்டரி விற்பனை: இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வளவனூா் காவல் உதவி ஆய்வாளா் தங்கப்பாண்டியன் மற்றும் போலீஸாா், சனிக்கிழமை காலை பிள்ளையாா்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த மூவரைப் பிடித்து விசாரித்த போது, அவா்கள் இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா்கள் விழுப்புரம் வி.மருதூா் துரைசாமி லேஅவுட் பகுதியைச் சோ்ந்த ச.மணவாளன் (48), பிள்ளையாா்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ச.ரகு (33), புதுவையைச் சோ்ந்த பா.கஜேந்திரன் (55) என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து மணவாளன், ரகுவை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகள், இணையவழி லாட்டரி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், கஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.