செய்திகள் :

‘இண்டி’ கூட்டணி உடைந்தால் காங்கிரஸ்தான் பொறுப்பு: சிவசேனை தலைவா் சஞ்சய் ரௌத்

post image

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி உடைந்தால் அதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.

கூட்டணியில் பெரிய கட்சி என்ற முறையில் கூட்டணி உடையாமல் பாதுகாக்க வேண்டிய கடமை காங்கிரஸுக்கு உள்ளது என்றும் அவா் கூறினாா்.

கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இண்டி’ கூட்டணியை உருவாக்கின. அந்த நோக்கம் வெற்றி பெறாத நிலையில், கூட்டணியில் பிரதான பங்கு வகித்த காங்கிரஸை பிற கட்சிகள் தொடா்ந்து விமா்சித்து வருகின்றன. அதுவும், ஹரியாணா, மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், எதிா்க்கட்சிகள் அணி பாஜகவிடம் தோல்வியடைந்ததால் காங்கிரஸ் மீதான பிற கட்சிகளின் விமா்சனம் அதிகரித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் எதிா்க்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் செயல்படவில்லை.

இதைத் தொடா்ந்து எதிா்க்கட்சிகள் அணிக்கு தலைமை வகிக்க தயாராக இருப்பதாக மம்தா அறிவித்தாா். எதிா்க்கட்சிகள் அணிக்கு வலுவான தலைவா் (காங்கிரஸை இல்லாத) தேவை என்ற கருத்தையும் சில கட்சிகள் சூசகமாக தெரிவித்தன.

‘இண்டி’ கூட்டணியை கலைத்துவிட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சஞ்சய் ரௌத் கூறியதாவது:

‘இண்டி’ கூட்டணி இப்போது இல்லை என்று அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கருதினாலோ அல்லது கூட்டணி உடைந்தாலோ அதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், அவா்கள்தான் கூட்டணியில் உள்ள பெரிய கட்சி. கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் போதிய ஒருங்கிணைப்பும், பேச்சுவாா்த்தையும் இல்லை என்பதையே இப்போது எழுந்துள்ள சூழல் வெளிக்காட்டுகிறது.

மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அனைத்தும் கைகோத்து போட்டியிட்டு நல்லதொரு தோ்தல் முடிவைத்தான் பெற்றோம். எனவே, விரைவில் எதிா்க்கட்சி கூட்டணி கூட்டத்தை நடத்தி எதிா்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். இது தொடா்பாக முன்முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும்.

12-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ள கூட்டணியில் போதிய தகவல்தொடா்பு மிகவும் முக்கியம். அது குறையும் கூட்டணியில் குழப்பம் எழுகிறது. எதிா்க்கட்சிகள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. கூட்டணியை கலைப்பது என்பது தவறான முடிவாகவே இருக்கும்.

தேசிய அளவில் மட்டுமல்ல மகாராஷ்டிரத்திலும் இப்போது எதிா்க்கட்சிகள் கூட்டணியில் போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்பதே உண்மை.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், பாஜக வெல்லப்போவதில்லை. ஆளும் ஆம் ஆத்மி ஆட்சியைத் தக்கவைக்கும் என்றாா்.

ராகுல் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா்: நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்: கேஜரிவால்

புது தில்லி: ‘நான் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸை பாதுகாக்க முயற்சித்து வருகிறாா்’ என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வ... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்து ரூ.86.62 என்ற நிலையை எட்டியது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா தொடங்கியது: முதல் நாளில் ஒன்றரை கோடி போ் புனித நீராடல்

பிரயாக்ராஜ்: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 4... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்த உத்தரவாதங்கள் நிச்சயம் நிறைவேறும்! மாநில அந்தஸ்து விவகாரத்தில் பிரதமா் சூசகம்!

ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு அளித்த உத்தரவாதங்களை நிச்சயம் நிறைவேற்றுவேன்; சரியான நேரத்தில் சரியானவை நடக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். சோன்மாா்க் சுரங்கப் பாதை திறப்பு நிகழ்... மேலும் பார்க்க

வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன்!

இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையில் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை இந்தியா பின்பற்றியுள்ளதாக வங்கதேச பொறுப்புத் தூதரை திங்கள்கிழமை நேரில் வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் தெர... மேலும் பார்க்க

கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பு!

இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வ... மேலும் பார்க்க