பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திய இந்தியா? "அடுத்த டார்கெட் ஜெர்மனி" - மத்திய அரசு...
Cinema Roundup 2025: இந்தாண்டு கவனம் பெற்ற வெப் சீரிஸ்கள் என்னென்ன? | எங்கு பார்க்கலாம்?
2025-ம் ஆண்டு முடிவை எட்டிவிட்டது. இந்த ஆண்டு வெளியாகி பெரிதளவில் பேசப்பட்ட, பலராலும் பின்ச் வாட்ச் செய்யப்பட்ட வெப் சீரிஸ்களை இங்கு பார்ப்போமா...
கோலிவுட்:
* குற்றம் புரிந்தவன் (Kuttram Purindhavan)
இயக்குநர் செல்வமணி முனியப்பன் இயக்கத்தில் பசுபதி, விதார்த் ஆகியோரின் நடிப்பில் சோனி லிவ் தளத்தில் வெளியான இந்த சீரிஸ் இந்த ஆண்டு தமிழ் ரசிகர்களை பெரிதளவில் கவனம் ஈர்த்தது.
* சுழல் 2 (Suzhal – The Vortex)
முதல் சீசனின் வெற்றிக்குப் பிறகு, இரண்டாம் சீசன் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த சீரிஸ் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.

* ஹார்ட் பீட் (Heart Beat):
மருத்துவமனை வாழ்க்கையை மையமாகக் கொண்டு, காதல், நட்பு, பணிச்சூழல் சிக்கல்களை எளிமையாகச் சொன்ன 100 எபிசோடுகளைக் கொண்ட தொடர் இந்த 'ஹார்ட் பீட்'. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸை இணையவாசிகள் கொண்டாடித் தீர்த்தனர்.
பாலிவுட்:
* The Ba***ds of Bollywood
நடிகர் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கான் இயக்கத்தில் எக்கச்சக்க பாலிவுட் நட்சத்திரங்களின் கேமியோவில் உருவான இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
* பாதாள் லோக் – சீசன் 2 (Paatal Lok – Season 2)
முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. இயக்குநர் சுதீப் சர்மா இயக்கத்தில் வெளியான பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.
* டெல்லி கிரைம் – சீசன் 3 (Delhi Crime – Season 3)
முதல் இரண்டு சீசன்களின் வெற்றியை அடுத்து டெல்லி கிரைம் சீரிஸின் மூன்றாவது சீசன் இந்த ஆண்டு வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. ஷெஃபாலி ஷா, ஹூமா குரேஷி ஆகியோர் நடிப்பில் உருவான இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

* பஞ்சாயத் – சீசன் 4 (Panchayat – Season 4)
'பஞ்சாயத்' வெப் சீரிஸின் முதல் மூன்று சீசன்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நான்காவது சீசன் இந்த ஆண்டு பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.
* தி ஃபேமிலி மேன் – சீசன் 3 (The Family Man – Season 3)
இயக்குநர்கள் ராஜ் & டிகே கூட்டணியில் வெளிவந்த 'ஃபேமிலி மேன்' வெப் சீரிஸின் முந்தைய சீசன்களுக்கு ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பு கிடைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அந்த சீரிஸின் மூன்றாவது சீசன் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.
ஹாலிவுட்:
ஹாலிவுட்டைப் பொறுத்தமட்டில் இந்தாண்டு நெட்பிளிக்ஸ் சீரிஸ்களே பார்வையாளர்களின் லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. அடலசென்ஸ் வெப் சீரிஸ் இந்தாண்டு பெரியவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ, ஸ்க்விட் கேம், வெட்னெஸ்டே ஆகிய வெப் சீரிஸ்களின் அடுத்த சீசன்கள் இந்தாண்டு வெளியாகி பார்வையாளர்களால் பின்ச் வாட்ச் செய்யப்பட்டது.

அடலசென்ஸ் (Adolescence) - நெட்பிளிக்ஸ்
ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் – பருவம் 5 (Stranger Things – Season 5) - நெட்பிளிக்ஸ்
ஸ்க்விட் கேம் – பருவம் 3 (Squid Game – Season 3) - நெட்பிளிக்ஸ்
வென்ஸ்டே (Wednesday) - நெட்பிளிக்ஸ்





















