Gold Rate: இன்றும் குறைந்த தங்கம்; மாறாத வெள்ளி; இன்றைய தங்கம் விலை என்ன?
பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திய இந்தியா? "அடுத்த டார்கெட் ஜெர்மனி" - மத்திய அரசு சொல்வது என்ன?
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் டாப் நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா அந்த இடத்தைப் பிடித்துள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில், மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியையும் இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
2025-ம் ஆண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து '2025: A Defining Year for India’s Growth' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது இந்திய அரசு.

அதில் கூறப்பட்டுள்ளதாவது...
> தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.18 டிரில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பட்டியலில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
> 2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 பில்லியனாக உயர்ந்து, மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளும்.
> 2024-25 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 7.4 சதவிகிதமாகவும், 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவிகிதமாகவும் இருந்தது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி. அது 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 8.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
உலகளவில் நிலையற்ற தன்மை இருந்தாலும், இந்தியா தொடர்ந்து வளர்ந்து வருவது இதன் மூலம் தெரிகிறது.

> இந்தியாவில் பணவீக்கமும் அதிகளவில் உயரவில்லை. இந்த ஆண்டின் மத்தியில் அது நன்றாகக் குறைந்தது.
> 2025-26 நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று முன்பு இந்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. அதை இப்போது திருத்தி 7.3 சதவிகிதமாக மாற்றியுள்ளது.
> இந்தியாவில் இந்த ஆண்டு வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது.
> உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளும் இந்தியாவின் வளர்ச்சியை மிக பாசிட்டிவாக கூறியுள்ளன.





















