செய்திகள் :

சைவா சாதனையாளர் விருது: பெண் தொழிலதிபர் மீனலோஷினி ராஜா தேர்வு!

post image

திருச்சியைச் சேர்ந்தவர் மீனலோஷினி ராஜா. இவர் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜோராமி சன் பைபர் ஷீட் ஏஜென்சிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

இவரது தலைமையில் அந்த நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது.

இதற்கிடையே தென்னிந்திய மகளிர் சாதனையாளர்களுக்கு சைவா விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

பெண் தொழிலதிபர் மீனலோஷினி ராஜா
பெண் தொழிலதிபர் மீனலோஷினி ராஜா

தொழில் முறையிலான ஆர்வம், கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்துறை விநியோகத்தில் உயர் தரமான எண்ணங்களை நிர்ணயித்து, அதன் மூலம் தரமான தீர்வுகளை வழங்கி, தான் சார்ந்த நிறுவனத்தையும், பிறரையும் ஊக்கப்படுத்தி இருக்கிறார். 

அந்த வகையில் தென்னிந்திய அளவில் 2025-ம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட பெண் தொழிலதிபராக சைவா சாதனையாளர் விருதினைப் பெற திருச்சி மீனலோஷினி ராஜா போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனலோஷினி ராஜாவுக்கு சைவா சாதனையாளர் விருது பெற தேர்வு செய்யப்பட்டதை உறுதி செய்து அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

GRT: இரண்டு விருதுகள்; நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் 2025-ஐ வென்ற ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்

இவ்வாண்டின் சிறந்த காதணி (நிறக்கல்) மற்றும் சிறந்த காதணி (வைரம்) நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் 2025-ல் 'இரட்டை விருது' பெற்ற ஒரே நிறுவனம் என்ற பெருமையை அடைந்துள்ளது ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ்.1964 ஆம் ஆண்டு துவங... மேலும் பார்க்க

2025- ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் பிசினஸ் அவார்ட்ஸை வென்ற ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்!

தென் இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் ஆபரண நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், தனது நம்பிக்கை மற்றும் சிறப்பின் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. டைம்ஸ் பிசினஸ் அவார்ட்ஸ் 2025-ல் ஆபரண... மேலும் பார்க்க