செய்திகள் :

"இந்தப் படத்தை பார்க்கும் போது நான் அழுதேன்.!'- 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் குறித்து ராஜமௌலி

post image

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று (செப்.28) சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய எஸ்.எஸ். ராஜமௌலி, "இந்த படத்தின் முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த 'உலக நாயகன்' கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நன்றி.

'டோண்ட் டிரபிள் தி டிரபிள்'
'டோண்ட் டிரபிள் தி டிரபிள்'

'கருப்பு', 'விஸ்வநாத் ‌& சன்ஸ்' என டபுள் டமாக்கா வெற்றியை வழங்கிய சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

'சிங்கம்' படத்தின் மூலம் மாஸான போலீஸ் அதிகாரியை காட்சிப்படுத்திய உங்களிடமிருந்து, 'சீன்' படத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரியை காட்சிப்படுத்தி இருப்பீர்கள் என நம்புகிறோம்.

நவம்பரில் அந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். அந்த திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.‌

ஒரு முறை என்னிடம் மிகப் பெரிய கட்டிடக் கலை நிபுணர் சொன்னார்... 'நம்முடைய நகத்தின் மேல் ஒரு கட்டிடத்தின் அவுட்லைனை வரைய முடிந்தால்.. அதுதான் மிகச் சிறந்த கட்டிடம்' என்றார். இது என்னை பொறுத்தவரை திரைப்படத்திற்கும் பொருந்தும்.

இரண்டரை மணி நேர திரைப்படத்தை இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட கதையாக சொல்லப்பட வேண்டும். அதுதான் சிறந்த படம். இதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் ஷஷாங்கிடம் சொன்னேன்.

எஸ்.எஸ். ராஜமௌலி
எஸ்.எஸ். ராஜமௌலி

இயக்குநர் கதை சொல்வதற்காக என்னை சந்தித்தார். அப்போது அவர் எனக்கு மூன்று மணி நேரத்தைத் தாருங்கள். இப்படத்தின் கதையை சொல்கிறேன் என்றார். அவரிடம் நிச்சயமாக மூன்று மணி நேரத்தை ஒதுக்க முடியாது. உங்களால் ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை சொல்ல முடியுமா ? என கேட்டேன்.

அது எப்படி சாத்தியம் ? எனக் கேட்டார். ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை நீங்கள் சொன்னால்.... அது எனக்குப் பிடித்திருந்தால்... நான் இரண்டரை மணி நேர கதையைக் கேட்கிறேன் என்றேன்.‌ அப்போது அவர் யோசித்து எனக்கு ஐந்து நிமிடம் வேண்டாம். ஒரே ஒரு வாக்கியத்திற்குள் இந்தக் கதையை சொல்கிறேன் என்றார்.

'ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை..' என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த ஒற்றை வாக்கியத்தில், இதில் இருக்கும் எல்லா விசயங்களும் என் மனதில் ஓடியது. அதனால் இந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது. அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.

 ஃபஹத் பாசில்  ஒரு சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் 'கும்பளாங்கி நைட்ஸ்', 'ஜோஷி',  'ட்ரான்ஸ்', என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

எஸ்.எஸ். ராஜமௌலி
எஸ்.எஸ். ராஜமௌலி

அவர் எப்படி, இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்பது இன்றுவரை எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர் தொடர்ந்து டார்க் ஷேடுள்ள கேரக்டர்களில் நடிக்கிறார் என வியப்பாகவே இருக்கும். இந்த படத்திலும் அவர் நடித்திருப்பது சிறப்பு.

மீண்டும் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படத்தின் ராஸ்கல் அவர்தான். சூரி எனும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பிரதியை டப்பிங் இல்லாமல்... இசை இல்லாமல்... பார்க்கும் போது நான் அழுதேன், சிரித்தேன். அந்த அளவிற்கு என்னை இந்தப் படம் கவர்ந்தது. அந்த அளவிற்கு அந்த சூரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Don't Trouble The Trouble: "இப்படி ஒரு கதையைக் கேட்டதும் இல்லை... நடித்ததும் இல்லை!"- ஃபகத் ஃபாசில்

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க

Suriya: "அது ஜோதிகாவின் 20 வருட பக்கெட் லிஸ்ட்!" - 20ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம் பற்றி சூர்யா

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு - மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் ... மேலும் பார்க்க

"சென்னையில்தான் சினிமாமீது காதல் கொண்டேன்; இங்கு எனக்கு பிடித்த உணவு..!"- ராஜமௌலி ஷேரிங்ஸ்

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க

"ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஊதியம்" - நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்களும் நிறைவே... மேலும் பார்க்க

Suriya: "ஒரு முட்டாள் பதிவு போட்டான் என்பதற்காக..." - ரசிகர்கள் கூட்டத்தில் சூர்யா

சூர்யாவுக்கு 'கருப்பு', 'விஸ்வநாத் & சன்ஸ்' என இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன. அத்தோடு தீபாவளி வெளியீடாக மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அவர் நடித்திருக்கு... மேலும் பார்க்க

Dorothy: "இனி படம் எடுக்க வேண்டாம் என்றிருந்தேன்; ஆனால், 'டோரதி' படம்..." - இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைத்துறையின் முக்கிய இயக்குநர்கள் பலரும் இப்படத்தைப் பார்த்துப் பாராட்டிப் பேசி வருகிறார்க... மேலும் பார்க்க