செய்திகள் :

'இந்தியாவின் கடனை அடைக்க பலே ஐடியா!' - அமைச்சர் கில்லி சரத்தின் '10' பொன் மொழிகள்

post image

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் 'கில்லி' சரத், தவெகவினர் அத்தனை பேரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு முதல்வரை புகழ்ந்து தள்ளி பொன்மொழிகளாக அவிழ்த்திருந்தார். அதன்வழி இந்தியாவின் கடனை அடைக்கவும் ஒரு பலே ஐடியாவை கொடுத்திருக்கிறார்.

Sarath
Sarath

அமைச்சர் சரத் முதல்வர் குறித்து அவையில் அவிழ்த்த பொன் மொழிகள்,

> 'சிறந்த தலைவர்கள் மத்தியில் சிறந்தே பிறந்த தலைவா... நான் மீண்டும் இறந்து பிறந்தால் உங்களை மட்டும் மறவாமல் இருக்க அருள்வாய்.

> கிருஷ்ணன் பிறந்ததை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இயேசு பிறந்ததை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். நபிகள் பிறந்ததை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். நாடே கொண்டாடும் பிறந்த தினம் எது தெரியுமா? நாடே கொண்டாடும் எழுச்சி நாள் ஜூன் 22.

> 80 யை கடந்தவர்கள் பேரன் ஆட்சி என்கிறார்கள். 40 இல் உள்ளவர்கள் நண்பன் ஆட்சி என்கிறார்கள். 20 இல் உள்ளவர்கள் ப்ரோ ஆட்சி என்கிறார்கள். 10 இல் உள்ளவர்கள் மாமா ஆட்சி என்கிறார்கள். தாய் வயிற்றில் உள்ளவர்கள் நாளைய ஆட்சியும் கில்லிதான் என்கிறார்கள். மொத்தத்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான்.

> உங்களுக்கு என் ஆயுளையும் என் குடும்பத்தின் ஆயுளையும் சேர்த்து தருகிறேன்.

> எங்கள் இதயத்திலும் இல்லத்திலும் CM ஆக இருக்கும் தலைவா....பாரதத்தின் நாளைய PM நீங்கள்தான்.

Sarath
Sarath

> முதல்வரின் சேவையை பாராட்டுவோருக்கு சேவை வரி விதித்தால் இந்தியாவின் கடனை இன்றே அடைக்கலாம்.

> தமிழகத்தை காக்க வந்த நவசக்தியே...யுவசக்தியே.

சாதாரண தண்ணீர், கோவிலில் தீர்த்தமாகிறது. சாதாரண சாதம் கோவிலில் பிரசாதம் ஆகிறது. அதேமாதிரி, தவெக அலுவலகம் செல்லும் என்னைப் போன்ற எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் ஆகிறார்கள்' என்றார்.

கடைசியாக, 'காலத்தின் அருமை கருதி தீர்மானங்களின் தலைப்பை மட்டும் வாசிக்கிறேன்' என முக்கியமான மேட்டரை ஹைலைட்டை மட்டும் சொல்லிவிட்டு கில்லியாக அமர்ந்துவிட்டார்.

'கைவிட்ட காவல்துறை; கட்டுக்கடங்காத கூட்டம்... உயிர்பிழைத்து வந்ததே..!'- விசிக மாநாட்டில் நடந்ததென்ன?

வி.சி.க-வின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதியிலேயே கைவிடப்பட்டதும், அந்தக் கூட்டநெரிசலுக்கு மத்தியிலும் 'த.வெ.க-வுடன் இணைந்து பயணிப்போம்' என திருமா அறிவித்திருப்பதும் பெரு... மேலும் பார்க்க

அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி; பரபரப்பாகும் `கோவளம்' மீட்டிங் - உன்னிப்பாக கவனிக்கும் வேலுமணி & கோ

அ.தி.மு.க-வுக்குள் வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கட்சியின் பொதுச் செயலாளருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியிருக்கிறது. அ.தி.மு.க பொ... மேலும் பார்க்க

நெருங்கும் காலக்கெடு, UK விசா கிடைக்காத தமிழக மாணவர்கள் - கனிமொழி மத்திய அரசுக்கு கடிதம்

கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக அரசு அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்கள் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ... மேலும் பார்க்க

வண்ணாங்கோவில்: ஆபத்தான முறையில் காத்திருக்கும் மாணவர்கள் - பேருந்து நிறுத்தம் எப்போது அமைக்கப்படும்?

திருச்சி–திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள வண்ணாங்கோவில் பகுதியில் தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கல்வி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில... மேலும் பார்க்க

Iran War: அமெரிக்கா முன் மூன்றே வழிகள்; மூன்றுமே சிக்கல்தான்! - தவிக்கும் ட்ரம்ப் | முழு அலசல்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம், போரிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு பாதையை அமெரிக்காவுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தம், விர... மேலும் பார்க்க

இந்தியாவைப் பார்த்து அமெரிக்காவும் மாறுகிறதா? வாக்காளர் அட்டைக்கு புதிய சட்டம் - ட்ரம்ப் பிளான்!

1982-ம் ஆண்டில் முதன்முறையாக சோதனை முயற்சியாக இந்தியா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தியது. அதன் பின், 2003-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ப... மேலும் பார்க்க