செய்திகள் :

இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா? - மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சொல்வது என்ன?

post image

ஈரான்-அமெரிக்கா- இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விநியோகத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதன்காரணமாக பல நாடுகள் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதனிடையே கோவிட் காலத்தில் விதிக்கப்பட்ட லாக்டவுன் இந்தியாவில் மீண்டும் விதிக்கப்படலாம் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

கேஸ் சிலிண்டர்
கேஸ் சிலிண்டர்

இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.

"மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக, நாட்டில் ஊரடங்கு (லாக்டவுன்) பற்றிய வதந்திகள் முற்றிலும் தவறானவை.

இதை நான் தெளிவாகக் கூறுகிறேன். அத்தகைய முன்மொழிவு எதுவும் பரிசீலனையில் இல்லை.

இத்தகைய நேரங்களில் நாம் அமைதியாகவும், பொறுப்பாகவும், ஒற்றுமையாகவும் இருப்பது முக்கியம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் வதந்திகளைப் பரப்புவதற்கும், பீதியை ஏற்படுத்தும் முயற்சிகள் தீங்கு விளைவிக்கக் கூடும்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

எரிசக்தி மற்றும் எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றித் தொடர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதால், இந்தியாவின் எரிசக்தி நிலைமை பாதுகாப்பாக உள்ளது.

உருவாகும் சவால்களைச் சமாளிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detail

நாளையோடு ஈரான் போர் நான்கு வாரங்களை நிறைவு செய்யப்போகிறது.'ஈரான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது...', 'சிறப்பான பேச்சுவார்த்தை இது'; 'அமெரிக்காவிற்கு பரிசாக ஈரான் 10 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்த... மேலும் பார்க்க

'என் பிரசாரத்தை மட்டும் ஏன் தடுக்குறீங்க?' - கொந்தளிக்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பெரம்பூரின் தேர்தல் அதிகாரி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்திருக்கின்றார். இதற்கு எதிராக விஜய் கொந்தள... மேலும் பார்க்க

சென்னை: மாணவியின் பாலியல் புகார்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு கைது!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும்... மேலும் பார்க்க

பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு? நிர்வாகிகள் அவசர ஆலோசனை! - நிலவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை அவர் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்துள்ளார் என்கிற தகவல் வெளி... மேலும் பார்க்க

சூரியனில் மறையும் பம்பரம்: `இது கூட்டணி அல்ல,எங்களை அழிக்கும் திட்டம்!'- மதிமுக நிர்வாகிகள் குமுறல்

"சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம். இதுதான் எங்கள் நிலைமை. திமுக எங்களுடைய தரத்திற்கு தகுந்த மாதிரி எண்ணிக்கை கொடுக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. அதேபோ... மேலும் பார்க்க

`பழனி தொகுதி, பாஜக-விற்கே வேண்டும்’ - தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினர்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த பட்டியலை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழன... மேலும் பார்க்க