செய்திகள் :

‘இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் அவர் இந்து அல்ல’ - மோகன் பகவத்

post image

‘ஒரே உலகம், ஒரே மனிதகுலம்’ என்கிற நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 29) நியூயார்க்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் இந்து - முஸ்லிம் குறித்து மோகன் பகவத் பேசியதாவது...

“இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்று எந்தவொரு இந்து நினைத்தாலும், அவர் இந்துவாகவே இருக்க முடியாது.

உங்களை இந்து என்று நீங்கள் அழைத்துக் கொள்ள வேண்டுமானால், ‘எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன’ என்றும், ‘ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை உண்டு’ என்றும் நீங்கள் நம்ப வேண்டும்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

மனிதர்களுக்கு இடையே எந்தப் பாகுபாடும் இல்லை. நான் ஒரு சமய அறிஞரோ அல்லது மத அதிகார அமைப்போ கிடையாது.

ஆனால், ‘மதங்கள் வேறாக இருக்கலாம், ஆனால் மனிதநேயம் ஒன்றுதான், உண்மை ஒன்றுதான்.

மனிதகுலம் என்பது அந்த உண்மையின் விளைவே’ என்று பாரம்பரியமாகச் சொல்லும் ஒரு சமூகத்தில் நான் பணியாற்றுகிறேன்” என்று பேசியுள்ளார்.

'முதலமைச்சரின் ஆட்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்'- காங்கிரஸ் அரசை விமர்சித்த பினராயி

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பையன்னூரில் சி.பி.எம் சார்பில் தற்போதையை அரசியல் நிலையை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கலந்துகொண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கார் கொடுத்தீங்க, டிரைவர்?'- `ஹெல்மெட்’ அணியாமல் வந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு அபராதம்

புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முத்தியால்பேட்டை தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டனுக்கு கார் வழங்கப்பட்டிருக்கும் நிலையி... மேலும் பார்க்க

நேபாள வெள்ளம்: 'இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை' - இந்தியாவின் அடுத்தக்கட்ட உதவி என்ன?

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26), உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் பனிப்பாறை விழுந்து சரிந்ததால் தான் ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட... மேலும் பார்க்க

ஸ்டாலின் பாதுகாப்பு Z+-ல் இருந்து Z ஆக குறைப்பு; காரணம் என்ன?

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினின் பாதுகாப்பு Z+ பிரிவிலிருந்து Z ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. Z+ பிரிவின் கீழ், குறிப்பிட்ட நபரின் பாதுகாப்பிற்காகச் சுழற்சி முறையில் கிட்... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: புதன் சந்தையை நாற்றமடிக்க வைக்கும் கோடியூர் ஏரி – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

சந்தை என்றாலே பரபரப்பும், மக்கள் கூட்டமும், வியாபாரிகளின் குரல்களும்தான் நினைவுக்கு வரும். ஆனால், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள புதன் சந்தையில் தற்போது நிலைமை வேறாக இருப்பதாக பொது... மேலும் பார்க்க