செய்திகள் :

மது போதையில் மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தை: `20 ஆண்டுகள் சிறை!'- புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி

post image

தந்தை என்பவர் பெற்ற பிள்ளைக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கவசம். ஆனால், மது போதையில் மிருகமாக மாறி, தன் சொந்த 16 வயது மகளையே சீரழித்துக் கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 29.06.2025 அன்று, சிறுமியின் தாயார் வழக்கம்போல் பிழைப்பிற்காக வேலைக்குச் சென்றிருந்தார். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு வந்த தந்தை, பெற்ற மகள் என்றும் பாராமல் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் மிருகமாக மாறியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, சிறுமியை மிரட்டி பாலியல் தாக்குதல் செய்துள்ளார். இந்தக் கொடூரத்தால் அந்தச் சிறுமி 3 மாத கர்ப்பமானார்.

காவல்துறை விசாரணை -போக்ஸோ பாய்ந்தது:

சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், விசாரணையில் உண்மை அறிந்து கதறித் துடித்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய புலன் விசாரணை அதிகாரி ஆய்வாளர் சாந்தகுமாரி   வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். பெற்ற மகளையே சீரழித்த அந்தப் போதை மிருகத்தை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தார்.

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:

இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர யோகமலர்  ஆஜராகி, "பெற்ற மகளுக்கே துரோகம் இழைத்த இந்த மிருகத்தனமான குற்றத்திற்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என வலுவாக வாதாடினார்.

வழக்கை முழுமையாக விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி ராஜா   குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ₹10,000 அபராதம் விதித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அரசு சார்பில்  ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கவும்  நீதிபதி உத்தரவிட்டார்.

`இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியம் இல்லை' - மாணவியின் கோரிக்கையை நிராகரித்த உ.பி. உயர் நீதிமன்றம்

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது அவர்களின் மத நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் நாட்டில் சில மாநிலங்களில் கல்வி கற்க வரும் இஸ்லாமிய மாணவிகள் கல்வி வளாகத்திற்குள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

தூத்துக்குடி: இடிக்கப்பட்ட ரயிலடி விநாயகர் கோயில் - பின்னணியில் கிறிஸ்தவ மதபோதகரா? | முழுப் பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் ’இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சபை’யை கிறிஸ்தவ மதபோதகர் மோகன். சி.லாசரஸ் நடத்தி வருகிறார். குரும்பூர் ரயில் நிலையம் எதிரில் இந்த சபை இயங்கி வருகிறது. இந்த சபைக்கு அ... மேலும் பார்க்க

₹20 லஞ்சம்... 30 ஆண்டுகள் நடந்த வழக்கு! - இறுதி விசாரணையில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

குஜராத்தில் ₹20 லஞ்சம் தொடர்பாக 1996-ல் தொடங்கிய வழக்கு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது.இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரசு அலுவலகத்தின் கிளார்க் (cle... மேலும் பார்க்க

காவிரி: ``ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்!" - உச்ச நீதிமன்றம் அதிரடி

காவிரியில் இருந்துதமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடக் கோரித்தமிழகஅரசு தாக்கல் செய்த மனு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

உ.பி முசாபர்நகர் நீதிமன்றம்: `4 மாதத்தில் 22 பேருக்கு தூக்குத் தண்டனை' - நடுங்கும் கைதிகள்

தூக்குத்தண்டனை என்பது மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு நீதிபதி பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையை வழங்கி வருகிறார். அ... மேலும் பார்க்க

கரூர்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய வழக்கு; நியமன ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குக் கர... மேலும் பார்க்க