செய்திகள் :

``நானே மாடுபிடி வீரர்தான்; நான் எப்படி ஜல்லிக்கட்டு பற்றி தவறாக பேசுவேன்!"- எம்எல்ஏ கருப்பையா

post image

சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா இளைஞர்களை சீர்குலைக்கும் வகையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டதற்கு பதிலாக 50 கோடி ரூபாயை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு வழங்கியிருந்தால் விவசாயிகள் பயன் பெற்றிருப்பார்கள் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுகவும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் தான் பேசியது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, " திமுக ஆட்சியில் தடையில் இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை நான் ஏற்கனவே 2011- 16 ஆம் ஆண்டுகளில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏற்பாடு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியுள்ளேன்.

எனவே நான் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கவே மாட்டேன். நானும் மாடுபிடி வீரர்தான். எனவே இளைஞர்களை எனக்கு எதிராக திருப்பி விட பார்க்கிறார்கள்

எம்எல்ஏ கருப்பையா

இளைஞர்கள் எப்போதும் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக இருப்பவர்கள். நான் பேசியது ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்து போட்டி நடத்தினால் வெளிநாடுகளைப் போன்று ஒரு மைதானத்திற்குள்ளேயே இளைஞர்களின் திறமையை அடக்குவது போல அமைந்துவிடும் என பேசினேன்.

ஜல்லிக்கட்டு மைதானம் என்பது கால்நடைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட நிலையில் கால்நடை துறையிடம் இதுவரை அந்த இடம் ஒப்படைக்கப்படவில்லை.

மைதானத்திற்கு ஒதுக்கிய 50 கோடி ரூபாயை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்திருந்தால் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியானது வெளிப்படை தன்மையுடன் நடைபெறும். எந்த வித குளறுபடியும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பர்ய முறைப்படி நடத்தப்படும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இளைஞர்களின் போராட்டங்களுக்கு பின்பு கிடைத்த ஜல்லிக்கட்டு போட்டி குறித்து நான் எப்படி தவறாக பேசுவேன். எனவே நான் பேசியது குறித்து திரித்து தற்போது பேசப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

ஸ்டாலின் பாதுகாப்பு Z+-ல் இருந்து Z ஆக குறைப்பு; காரணம் என்ன?

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினின் பாதுகாப்பு Z+ பிரிவிலிருந்து Z ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. Z+ பிரிவின் கீழ், குறிப்பிட்ட நபரின் பாதுகாப்பிற்காகச் சுழற்சி முறையில் கிட்... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: புதன் சந்தையை நாற்றமடிக்க வைக்கும் கோடியூர் ஏரி – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

சந்தை என்றாலே பரபரப்பும், மக்கள் கூட்டமும், வியாபாரிகளின் குரல்களும்தான் நினைவுக்கு வரும். ஆனால், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள புதன் சந்தையில் தற்போது நிலைமை வேறாக இருப்பதாக பொது... மேலும் பார்க்க

"மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது"- விஜய் குறித்து தமிழிசை

இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தவெகவினர் கூறி வருகின்றனர். இதனிடையே 'இந்தியா டுடே - சி வோட்டர்' இணைந்து நடத்திய சமீபத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' (MOTN) கருத்துக்கணிப்பில், 2029 மக்களவைத் தே... மேலும் பார்க்க

’பெரியார், அம்பேத்கர் பெயர் விடுபட்டதற்கு நானே தார்மீக பொறுப்பு’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

கோவை கவுண்டர்மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத்குமார், பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்... மேலும் பார்க்க

ஆர்.எஸ்.எஸ்ஸின் நண்பர், விஷ்ணு ரெட்டியின் உறவினர்.. கிரண்குமார் ரெட்டி தமிழ்நாட்டின் ஆளுநரா?

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி நியமிக்கபட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், கடந்த மார்ச் முதல் த... மேலும் பார்க்க

65 பில்லியன் பேரல் எண்ணெய்... டிரம்பின் “உலகின் மிகப்பெரிய ஒப்பந்தம்” பின்னணி என்ன?

அமெரிக்கா, வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பில் பெரும்பான்மைக் கட்டுப்பாட்டைப் பெறும் புதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை “உலக வரலாற்றில... மேலும் பார்க்க