செய்திகள் :

இந்தியா வரவிருந்த நார்வே பத்திரிகையாளரின் விசா ரத்து; அரசியல் கட்சிகள் கண்டனம் - இதுதான் காரணமா?

post image

நார்வே நாட்டை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் ஹெல் லிங், இந்தியா வருவதற்கான விசா ரத்து செய்யப்பட்டிருக்கும் சம்பவம், பேசுபொருளாகியிருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பத்திரிகையாளர் ஹெல் லிங் இந்தியா வருவதற்கான காரணம்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹைதராபாத்தில் நவம்பர் 13,14 ஆகிய நாள்களில் பாரத் உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று எதிர்கால ஊடகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து உரையாற்ற இருந்தார் நார்வே நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹெல் லிங். ஆனால் இவர் இந்தியா வருவதற்கான விசா உள்துறை அமைச்சகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் ஹெல் லிங் விசா ரத்து செய்யப்பட காரணம் என்ன?

கடந்த 2026 மே மாதம், நார்வே நாட்டின் ஒஸ்லோவில் நடந்த இந்தியா மற்றும் நார்வே இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடி மற்றும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் ஆகியோர் ஊடங்களுக்கு அறிக்கை அளித்த பிறகு, ஹெல் லிங் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க முயன்றிருந்தார். இதன் காரணமாகவே ஹெல் லிங்கின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஹெல் லிங் தனது எக்ஸ் பதிவில்,

நார்வேயில் உள்ள இந்திய தூதரகத்தால் வழங்கப்பட்ட தனது விசா ரத்து செய்யப்பட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விமான நிலையத்திற்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது விசா ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு செல்ல அமித் ஷா தன்னை அனுமதிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி கண்டனம்

ஹெல் லிங் விசா ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடி நார்வே நாட்டிற்கு சென்றிருந்த போது ஹெல் லிங் அவரிடம் கேள்வி கேட்க முயன்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு, அரசு ஏன் கேள்விகளை கண்டு அஞ்சுகிறது ? என கண்டனம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரதமர் மோடியை கேள்வி கேட்டது மட்டுமே ஹெல் லிங் செய்த குற்றமாக தெரிகிறது!

இது தொடர்பாக இந்திய பதிப்பாளர்கள் சங்கம் ( Editors Guild of India ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியை கேள்வி கேட்டது மட்டுமே ஹெல் லிங் செய்த குற்றமாக தெரிகிறது. மேலும், கடைசி நேரத்தில் ஹெல் லிங்கின் விசா ரத்து செய்யப்பட்ட காரணம் குறித்து புரிந்துகொள்ள முடியவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் அதிகாரத்துவத்தின் அத்துமீறலை காட்டுவதோடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற பிம்பத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பேச்சு சுதந்திரம் என்பது, எல்லா ஜனநாயக நாடுகளும் கடைபிடிக்கும் கொள்கைகளில் ஒன்றாகும். இது அரசியலமைப்பு சட்டம் 19 (a)(1) -ன் படி அடிப்படை உரிமையாகும். ஹெல் லிங்கின் விசா ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை அரசு தெரிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'All is well, Confident-ஆ இருங்க.!'- குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கேக் வழங்கிய முதல்வர்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் சென்னை, கொளத்துர் பகுதியில் உள்ள மாநகராட்சி நட... மேலும் பார்க்க

'ஒரு நபரின் தினசரி வருமானம் 4.20 டாலர்கள்' - இந்தியாவில் வறுமை ஒழிந்துவிட்டதா? உலக வங்கி அறிக்கை

'இந்தியாவில் தீவிர வறுமை பெருமளவு குறைந்துவிட்டது' என்ற உலக வங்கியின் சமீபத்திய 'வறுமை மற்றும் சமத்துவ அறிக்கை' (Poverty and Equity Brief) தெரிவித்திருக்கிறது. 2011-13 காலகட்டத்தில் 27.1% ஆக இருந்த இந... மேலும் பார்க்க

`கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி; எம்எல்ஏ மீது ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை?' - எடப்பாடி காட்டம்

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, " தமிழக முதலமைச்சர் இதுவரை பத்திரிகை மற்றும் ஊடகங்களைச் சந்தித்து மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. இதனால், இந்த அரச... மேலும் பார்க்க

இஸ்ரேஸ் தேர்தல்: ஆட்சி அமைக்க காடி ஐசென்காடுக்கு அழைப்பு; பின்னடைவில் பெஞ்சமின் நெதன்யாகு!

இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பதற்கு காடி ஐசென்காடுக்கு (Gadi Eisenkot) அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்திருக்கிறார். இது நெதன்யாகுவிற்கு பின்... மேலும் பார்க்க

கோவை பெரியார் அறிவுலகம்: புத்தக கொள்முதலில் முறைகேடு? - சர்ச்சையான தமிழ் புத்தங்கள்... Album

கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகத்தின் தமிழ் புத்தகங்கள் பிரிவு கோவை பெரியார் அறிவுலகத்தின் தமிழ் புத்தகங்கள் பிரிவு கோவை பெரியார் அறிவுலகத்தின் தமிழ் புத்தகங்கள் பிரிவு கோவை பெரியார் அறிவ... மேலும் பார்க்க

நெல்லை: தாமிரபரணி ஆறு, கால்வாய்களில் திட்டப் பணிகள்; ஆய்வு செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன் | Photos

நெல்லையில் ஆறு, கால்வாய் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன்.!'சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா?'- அன்பில் மகேஸ் குறித்து மரிய வில்சன் பேசியதென்ன? மேலும் பார்க்க