செய்திகள் :

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்; ரூ.95,000 கோடியைத் திருப்பித் தருகிறது அமெரிக்க அரசு!

post image

இந்திய ஏற்றுமதியாளர்கள் செலுத்திய கூடுதல் சுங்க வரியான ரூ.95 ஆயிரம் கோடியைத் திருப்பித் தரும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது.

சர்வதேச அவசரப் பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ், அமெரிக்காவுடன் அதிக வர்த்தக உபரியைக் கொண்ட நாடுகளைக் குறிவைத்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுங்கவரி நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது.

இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி முதல் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவீத பரஸ்பர சுங்கவரி விதிக்கப்பட்டது.

பின்னர் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் காரணம்காட்டி ஆகஸ்டு 27-ம் தேதி மேலும் 25 சதவீதம் விதிக்கப்பட்டது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் 50 சதவீதம் வரை கூடுதல் சுங்கவரி சுமையை எதிர்கொண்டனர்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

சுங்கவரி விதிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, பிப்ரவரி மாதம் 20-ம் தேதி அந்த வரிகளை அரசியலமைப்புக்கு முரணானவை என்று அறிவித்து உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக வசூலிக்கப்பட்ட தொகையை ஏற்றுமதியாளர்களுக்குத் திருப்பி வழங்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான விரிவான நிர்வாக வழிமுறைகளை அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.95 ஆயிரம் கோடி) அதிகமான தொகை திருப்பி கிடைக்க உள்ளது என்று தொழில் துறையினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றன்ர்.

இந்த நடவடிக்கையின் மூலம் ஜவுளி, பொறியியல் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் மற்றும் பல்வேறு உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் அதிக பலன் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தியா - அமெரிக்கா: பரஸ்பர வரியில் அடுத்தக்கட்ட நடவடிக்கை
இந்தியா - அமெரிக்கா: பரஸ்பர வரியில் அடுத்தக்கட்ட நடவடிக்கை

அமெரிக்காவில் நேரடி தொடர்பு வங்கி இல்லாத இந்திய வங்கிகள் இந்தத் தொகையை எவ்வாறு பெறுவது என்ற குழப்பம் இருந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, ‘அமெரிக்காவில் கிளைகள் அல்லது முகமை வங்கி வசதி கொண்ட வங்கிகள் மூலமாக வசூல் கணக்குகளைத் திறந்து இந்தத் தொகையைப் பெறலாம்’ என்று தெரிவித்துள்ளது. இதனால் வங்கி தொடர்பான முக்கிய தடைகள் விலகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரியதர்ஷினி: கேரளத்தில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் தொடக்கம்; அமைச்சர் தலையில் கொட்டிய பாயசம்

கேரள மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பஸ் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக பிரியதர்ஷினி என்ற பெயரில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணத்... மேலும் பார்க்க

திமுக ரூட்டில் தவெக... மாற்றுக் கட்சியினரை அதிகளவில் இணைக்கும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

மதுரை, தேனி, மாவட்டங்களில் த.வெ.க. சார்பில் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் விழா கடந்த சனிக்கிழமையன்று நடைப்பெற்றது.மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட மா... மேலும் பார்க்க

TASMAC: ``இது வெறும் 'எண்' துடைப்பு" - டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மாதம் ரூ.4,000 கோடியும், கடந்த நிதியாண்டில் ரூ.48,344 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. எனினும், குடும்பங்கள் சீரழிவதைத் தடுக்க பூரண மதுவிலக்கு கோரிக்கை தொடர்ந்... மேலும் பார்க்க

`மனம் பதறுகிறது; மூன்று வயது குழந்தை... சமூகம் பேரழிவை நோக்கி...' - பா.ரஞ்சித் ஆதங்கம்!

கும்மிடிப்பூண்டியில் 3-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தமிழ்நாடு அரசுக்கு சில ஆலோசனைகளுடன், கண்டனத்தையும் பதிவு... மேலும் பார்க்க

CJP: ``இது கோழைத்தனத்தின் அடையாளம்" - தாக்குதலுக்குப் பின் அபீஜித் திப்கே பதிவு!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் பகுதியில், இன்று மதியம் 3 மணியளவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அழைப்பு விடுத்திருந்தது. இந்த தர்ணா போராட்டத்தில் கலந... மேலும் பார்க்க

TASMAC : 'காலிபாட்டில் வாங்குறதுக்கு ஒரு மெஷினாய்யா...' - கொந்தளிக்கும் மதுபிரியர்கள்!

டாஸ்மாக் கடைகளில் காலிபாட்டில்களை திரும்பப்பெற வேண்டுமென நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் காலிபாட்டில்களை சேகரிக்க நவீன மெஷின் ஒன்... மேலும் பார்க்க