செய்திகள் :

போலீஸிடம் இருந்து தப்பிக்க 4-வது மாடி சன்ஷேடில் பதுங்கிய திருடர்; கீழே விழுந்து பலியான சோகம்

post image

கேரள மாநிலம் பத்தனம்திட்டா குட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யராஜ் (21). மாணவரான இவர் எர்ணாகுளம் கம்மட்டிப்பாடம் ஸ்டார்ஹோம்ஸ் அபார்ட்மென்ட் அருகில் வாடகைக்குத் தங்கி லாஜிஸ்டிக்ஸ் படிப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் எர்ணாகுளம் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கம்மட்டிப்பாடம் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது மூன்றுபேர் கும்பல் கருங்கல்லால் தாக்கியுள்ளது.

பின்னர், அவரிடம் இருந்து ரூ.25,000 மதிப்புள்ள மொபைல் போனை அந்தக் கும்பல் பறித்துள்ளனர். இதுகுறித்து ஆதித்யராஜ் கடவந்தறா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், ஃபோர்ட் கொச்சி நெல்லுகடவு ஈரவேலி வீட்டைச் சேர்ந்த முகமது சாஹில் (18). 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் மூவரும் எர்ணாகுளம் நார்த் மேம்பாலத்திற்கு அருகில் உள்ள 'ஹலா ரெசிடென்சி' லாட்ஜில் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. அவர்களைத் தேடி போலீஸார் லாட்ஜிக்குச் சென்றனர். போலீஸ் ஜீப் லாட்ஜிக்குக் கீழே நிற்பதை மாடியில் இருந்து பார்த்த மூவரும் அங்கிருந்து தப்பிச்செல்லும் நோக்கில் ஓடினர். அதில் முகம்மது சாஹிலும், 17 வயது சிறுவனும் நான்காவது மாடிக்குச் சென்று, அங்கு வெளிப்புறச் சுவரில் இருந்த சன்ஷேடில் ஒளிந்துகொள்ள முயன்றனர்.

அப்போது, முகமது சாஹில் கால் தவறி கீழ்ப்பகுதியில் உள்ள பரமாரா கோவில் நுழைவாயில் நடைபாதையில் விழுந்தார்.

மரணம்
மரணம்

கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வைற்றிலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

இதற்கிடையே சன்ஷேடில் மறைந்திருந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். சிறுவன் இளஞ்சிறார் நீதிக்குழுமம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பலியான முகம்மது சாஹில்
பலியான முகம்மது சாஹில்

இவர்கள் மூவரும் பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும், இதற்கு முன்பும் பலமுறை கைதுசெய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியின் கண்காணிப்பில் இருந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் தங்கியிருந்த லாட்ஜ் அறையிலிருந்து மாணவனிடம் பறிக்கப்பட்ட மொபைல் போனும், பல போலி அடையாள அட்டைகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்தத் திருட்டு வழக்கு குறித்து கடவந்த்ரா போலீசாரும், கட்டிடத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து நார்த் போலீசாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்: சிறுவன் இறப்பில் விலகிய மர்மம்; அடித்துக்கொன்ற கொடூர அத்தை; பகீர் கிளப்பும் `படுபாதக’ செயல்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ஆஷா. இவர்களின் 6 வயது மகன் முகிலன். கடந்த 5 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழ்ந்துவந்த ராஜ... மேலும் பார்க்க

லஞ்சமும் டிஜிட்டல் மயம்! தாம்பரத்தில் ‘ஜிபே’ மூலம் பணம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் எல்லைக்குட்பட்ட கவுரிவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக (ஏ.இ) பணிபுரிந்து வந்தவர் பத்மாவதி. இவர் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக வாடிக்கையாளர் ஒருவரி... மேலும் பார்க்க

காவல் மரணம்: "ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்கவில்லை என்றால் அரசே அடக்க செய்யும்" - நீதிபதி கெடு விதிப்பு

சிவகங்கை அருகேயுள்ள மானாமதுரையில் கொலை செய்ய முயற்சித்த வழக்கு ஒன்றில் ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்த ஆகாஷ் டெலிசன் கைதான இரண்டாவது நாளே மூச்சு திணறல... மேலும் பார்க்க

வீட்டுக்குள் மாந்திரீகம்; ரத்தக் காயங்களுடன் சிறுவன் பிணம்; விசாரணை வளையத்துக்குள் பாட்டி - கொலையா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள மேல்பட்டி கிராமம் ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரின் மனைவி ஆஷா. இருவருக்கும் திருமணமாகி ஏழாண்டுகள் ஆகிறது. 6 வயதில் முகிலன் என்ற ஒரேயொரு மகன் மட்... மேலும் பார்க்க

பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை; மும்பையில் அதிர்ச்சி!

இந்தி சின்னத்திரையில் குங்கும் பாக்யா மற்றும் வாக்லே கி துனியா போன்ற டிவி தொடர்கள் மூலம் பிரபலம் அடைந்தவர், நடிகை சஞ்சிதா உகாலே (30). இவர் மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள நாலாசோபாராவில் வசித்து வந்தார... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 வயது சிறுமி உயிரிழப்பு; கொதித்தெழுந்த கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள சிறுபுழல்பேட்டை கிராமத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரின் மூன்று வ... மேலும் பார்க்க