செய்திகள் :

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 வயது சிறுமி உயிரிழப்பு; கொதித்தெழுந்த கிராம மக்கள்

post image

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள சிறுபுழல்பேட்டை கிராமத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரின் மூன்று வயது பெண் குழந்தை, நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் அருகில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளரான பிபின் மாஞ்சி (வயது 19) என்பவர், குழந்தையை புதர் பகுதிக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து குழந்தையைப் புதரில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

மக்கள் சாலை மறியல்

இது தொடர்பாகத் தகவல் அறிந்த கிராம மக்கள் பிபின் மான்ஜியைப் பிடித்துத் தாக்கி... கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். புதரிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை, இன்று காலை உயிரிழந்தது.

அதைத் தொடர்ந்து கொதிப்படைந்த சிறுபுழல்பேட்டை கிராம மக்கள், சிப்காட் பிரதான சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். `கஞ்சா, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்' என வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மக்கள் சாலை மறியல்

போக்குவரத்து முடங்கியதால், மக்களை கலைக்க முயன்ற போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாவட்ட கலெக்டர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கிராம மக்கள் மறியலைக் கைவிட்டனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு: மதுபோதையில் லாரியால் மோதிச் சென்ற ஓட்டுநர் - துரத்திச் சென்று பிடித்த துணிச்சல் பெண்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒருவர், நேற்று மாலை ஸ்கூட்டியில் சென்றுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா சந்திப்பு அருகில் சென்றுக் கொண்டிருக்கையில், பின்னால் வந்த லாரி ஒன்று பெண்ணின் ஸ்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் 3 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பீகாரை சேர்ந்த ஒருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ளது சிப்காட் பகுதி ஒன்று. அங்கு நேற்று மாலை ஒரு வட மாநிலத் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் சென்றுள்ளது. அந்தக் குழந்தையை சிப்காட் பகுதி முழுவதும் தே... மேலும் பார்க்க

சேலம்: பென்டிரைவ் முழுக்க பெண்களின் நிர்வாண வீடியோக்கள்; தவெக நிர்வாகி குறித்து அதிர்ச்சிப் பின்னணி

சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த த‌.வெ.க நிர்வாகி மணிகண்டன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஏமாற்றிப் பழகி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங... மேலும் பார்க்க

மதுரையில் சிங்கப்பெண் சிறப்புப் படையின் முதல் வழக்கு; மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியில் நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க