செய்திகள் :

டிரைவர் பிரேக் பிடிக்காவிட்டாலும் கார் தானாக நிற்கும்; அனுமதி வழங்கிய அரசு... விபத்துகள் குறையுமா?!

post image

இந்தியாவில் தானாக இயங்கும் 'டிரைவர் இல்லா கார்' மற்றும் வாகனப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கான ஒழுங்குமுறை விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கார்களில் பயன்படுத்தப்படும் ரேடார் சென்சார்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற அமைப்புகளுக்கான (Connected-car communication) அலைவரிசை உரிமக் கெடுபிடிகளை (Spectrum Licensing) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முழுமையாக நீக்கியுள்ளது.

இதன் மூலம், கார்கள் மோதிக்கொள்வதைத் தடுக்கும் 'ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் (Automatic Emergency Breaking)', 'அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல் (Adaptive Cruise Control)' மற்றும் 'பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங் (Blind-Spot Monitoring)' போன்ற ADAS (Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு வசதிகள் இனி இந்திய கார்களில் எளிதாக இடம்பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.

விதிமுறைகள் தளர்வு ஏன்?

இதுவரை, கார்களில் இத்தகைய விபத்துத் தடுப்பு சென்சார்களைப் பயன்படுத்த மத்திய அரசிடம் தனியாகப் பணம் செலுத்தி, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் (Spectrum License) பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் வாகன உற்பத்தியில் பெரும் தாமதமும், கூடுதல் செலவும் ஏற்பட்டு வந்தது.

தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, காரின் ரேடார் சென்சார்களுக்குப் பயன்படும் 77GHz-81GHz அலைவரிசைக்கும், வாகனங்கள் மற்றும் சாலை உள்கட்டமைப்புகளுக்கு இடையே அவசரத் தகவல்களைப் பரிமாறும் V2X (Vehicle-to-everything) தொழில்நுட்பத்திற்கான 5.9GHz அலைவரிசைக்கும் இனி தனியாக லைசென்ஸ் பெறத் தேவையில்லை. இந்த புதிய நடைமுறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சர்வதேச விதிகளுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு என்ன பயன்?

கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் பதிவாகி, அதில் 1.77 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அரசுத் தரப்பு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள்
வாகனங்கள்

லைசென்ஸ் கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் விற்கப்படும் அதே அதிநவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட கார்களை போஷ் (Bosch), கான்டினென்டல் (Continental) போன்ற நிறுவனங்கள் இந்தியாவிலும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். இதன் மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz), பிஎம்டபிள்யூ (BMW) போன்ற பிரீமியம் கார்களில் மட்டுமே இருந்த உயர்தர பாதுகாப்பு வசதிகள், இனி மாருதி சுசுகி, டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்களின் நடுத்தர விலை கார்களிலும் சாமானிய மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் - இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மெட்டா சேவைகள் பாதிப்பு!

மெட்டா நிறுவனத்தின் செயலிகளான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை, உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று முடங்கியுள்ளன. இன்று மதியம் முதல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் திடீரெனத் தொ... மேலும் பார்க்க

Grid Reorder: இன்ஸ்டா பயனர்கள் நீண்ட காலமாக கேட்ட வசதி! `வந்துவிட்டது' புதிய அப்டேட்! - ஏன் ஸ்பெஷல்?

இன்ஸ்டாகிராம் பயனர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்கள் பல காலமாக கேட்டுவந்த ஒரு முக்கியமான அம்சம், இப்போது நிஜமாகியிருக்கிறது. இனி உங்கள் இன்ஸ்டாகிராம் புரொஃபைல் பக்கத்தை ஒரு காலவரிசைப்படி மட்டும் பா... மேலும் பார்க்க

ChatGPT-யிடம் ஒரு கேள்வி கேட்டா, ஒரு பாட்டில் தண்ணீர் காலி! - மலைக்கவைக்கும் AI-யின் இருண்ட பக்கம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ChatGPT போன்ற AI கருவிகள் எவ்வளவு எளிமையாக, எவ்வளவு விரைவாக நமக்கு பதில்களைத் தருகின்றன! ஒரு மின்னஞ்சல் எழுதச் சொன்னால் சில நொடிகளில் தந்துவிடுகிறது. ஆனால், அந்த ஒவ்வொரு நொ... மேலும் பார்க்க

ஆப்பிள் ரசிகர்களே.! முதல் Foldable ஐபோன் iPhone 18 Pro உடன் அறிமுகம்? - வெளியாகும் தகவல்கள்!

ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த தருணம் நெருங்கிவிட்டது. சாம்சங், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் ஃபோல்டபிள் போன் மார்க்கெட்டில் இறங்கிய நிலையில், ஆப்பிள் தனது முதல் ... மேலும் பார்க்க

`AI-யே அடுத்தகட்ட AI-யை உருவாக்குகிறது!' `Pause' கேட்கும் ஆந்த்ரோபிக்! - ஏற்குமா AI நிறுவனங்கள்?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் வளர்ந்து வரும் சூழலில், டெக் உலகையே அதிர வைக்கும் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது 'ஆந்த்ரோபிக்' நிறுவனம். நாம் இதுவரை அறிவியல் புனைகதை... மேலும் பார்க்க

Nuclear Dustbin: 1,00,000 ஆண்டுகள் அணுக்கழிவைப் பூட்டிவைக்கும் நிலவறை தயார்! - நிரந்தர தீர்வாகுமா?

அணுமின் நிலையங்கள் நமக்குத் தேவையான மின்சாரத்தைத் தருகின்றன என்பது உண்மைதான். ஆனால், அதன் பிறகு வெளியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்வது என்பதுதான் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளுக்குப் பெரும் ... மேலும் பார்க்க