செய்திகள் :

`தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது!' - அண்ணாமலை

post image

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து தொடர்ந்து சட்ட ஒழுங்கு சிக்கல்கள் நீடிப்பதாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆரவலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். முதல்வர் விஜய் தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறை அலட்சியமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இது தொடர்பாக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது. இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

விஜய்
விஜய்

குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு? பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?

தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது' - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் முரண்படும் இஸ்ரேல்

வருகிற 19-ம் தேதி ஈரான் அமைதி ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் ஈரான் போரின் முக்கிய தரப்புகளில் ஒன்றான இஸ்ரேல் தனது கர... மேலும் பார்க்க

குழந்தை பாலியல் வன்கொடுமை: 'இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்' காவல்துறை விளக்கம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு உயிரிழந்த கொடூரச் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று (ஜூன்.14) மாலை 3 வயது குழந்... மேலும் பார்க்க

‘’உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை” - எடப்பாடியை விமர்சித்த சி.விஜயபாஸ்கர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.தவெக ஆட்சிக்கான நம்பிக்கை தீர்மானத்தில் ஆத... மேலும் பார்க்க

`இன்னுயிரையும் பொருட்படுத்தாத அர்ப்பணிப்பு'- கீர்த்தி சக்ரா தேனி ராணுவ வீரரை கௌரவித்த முதல்வர் விஜய்

கீர்த்தி சக்ரா (Kirthi Chakra) என்பது இந்தியாவில் அமைதிக்காலத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய ராணுவ விருது ஆகும். போர்க்களத்தில் அல்லாமல், மற்ற இடங்களில் நிகழும் அசாதாரண வீர தீரச் செயல்களுக்காகவ... மேலும் பார்க்க

`கூகுளின் ரத்தக்கறை.!' - சுந்தர் பிச்சையை புறக்கணித்த ஸ்டான்ஃபோர்டு மாணவர்கள் - காரணம் தெரியுமா?

கலிஃபோர்னியாவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா. உலகமே உற்றுநோக்கும் அந்த மேடையில் சிறப்பு விருந்தினராகப் பேச வருகிறார் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி ... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் புதிதாக ஆதார் கார்டு பெறத் தடை; ஏன் தெரியுமா?

அஸ்ஸாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கார்டு பெற தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கடந்த சனிக்கிழமை (ஜூன் 13), அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.என்ன அறிவ... மேலும் பார்க்க