செய்திகள் :

வேலூர் அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

post image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

மெடிக்கல் ஆபீசர் (MBBS), ஆயுஷ் மெடிக்கல் ஆபீசர் (சித்தா), செவிலியர் (B.Sc./DGNM), உதவி செவிலியர் (ANM), சிகிச்சை உதவியாளர் (NRHM), சிகிச்சை உதவியாளர் (NAM), லேப் டெக்னீஷியன், டென்டல் டெக்னீஷியன், ஹெல்த் இன்ஸ்பெக்டர், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW), ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

மொத்த காலிப்பணியிடங்கள்: 43

மாத சம்பளம்: ரூ.17,500 - ரூ.63,000

மருத்துவர்
மருத்துவர்

வயது வரம்பு: அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி:

மெடிக்கல் ஆபீசர் - MBBS முடித்திருக்க வேண்டும்.

ஆயுஷ் மெடிக்கல் ஆபீசர் (சித்தா) - BSMS

செவிலியர் - B.Sc. Nursing /DGNM

உதவி செவிலியர் - ANM

சிகிச்சை உதவியாளர் - Nursing Therapist course – Ayush

லேப் டெக்னீஷியன் - DMLT

டென்டல் டெக்னீஷியன் - Diploma in Dental Technician

ஹெல்த் இன்ஸ்பெக்டர் - MPHW / Health inspector Course

பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் - 8th

ஓட்டுநர் - LMV ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள்.

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தமிழ் மொழி கட்டாயம் தெரிந்து இருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.06.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று சேரும் வகையில் தபாலிலோ அல்லது நேரடியாகவோ கொடுக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம்,

"B" பிளாக், 2-வது மாடி,

மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி,

வேலூர் - 632 009. தொலைபேசி எண்: 0416-2252025

விண்ணப்பம் பதிவிறக்க: வேலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

'டிகிரி இருக்கிறதா?' மத்தியிலும், மாநிலத்திலும் வேலை; ரூ.1.50 லட்சம் சம்பளம்!

பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டென்ட் ஆடிட் ஆபீசர், அசிஸ்டென்ட் செக்‌ஷன் ஆபீசர், இன்ஸ்பெக்டர் ஆஃப் இன்கம் டேக்ஸ் உள்ளிட்ட பணிகள். வயது வரம்பு: குறைந்... மேலும் பார்க்க