செய்திகள் :

சேலம்: பென்டிரைவ் முழுக்க பெண்களின் நிர்வாண வீடியோக்கள்; தவெக நிர்வாகி குறித்து அதிர்ச்சிப் பின்னணி

post image

சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த த‌.வெ.க நிர்வாகி மணிகண்டன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஏமாற்றிப் பழகி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கொடூர சம்பவத்திற்கு எதிராக எம்.பி கனிமொழி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் எனவும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

கொடூரமான அத்துமீறலில் ஈடுபட்ட மணிகண்டன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைந்திருக்கிறது காவல்துறை. விரைவில் நீதிமன்றக் காவலில் எடுத்து மணிகண்டன் விசாரிக்கப்படவுள்ள நிலையில், மணிகண்டன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் பெண்களின் நிர்வாண வீடியோக்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

கைதான மணிகண்டன்
கைதான மணிகண்டன்

இந்த அதிர்ச்சிப் பின்னணி குறித்து சேலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், "மணிகண்டன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பென்டிரைவ் முழுக்க பெண்களின் நிர்வாண வீடியோக்கள் இருந்தன. பல பெண்களைக் கட்டாயப்படுத்தி ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக வீடியோ எடுத்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

அந்த வீடியோக்களில் இருந்த பெண்களில் 32 வயது கொண்ட ஒரு பெண் நேரடியாக வந்து கொண்டலாம்பட்டி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் யாராகா இருந்தாலும் தைரியமாக வந்து புகார் கொடுக்கலாம். பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து ரகசியம் காக்கப்படும்" என்றார்.

மதுரையில் சிங்கப்பெண் சிறப்புப் படையின் முதல் வழக்கு; மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியில் நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க