செய்திகள் :

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

post image

.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமானோர் வந்தார்கள். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் பொதுமக்கள, காவல்துறையினர் சோதனை இட்ட பின்னரே உள்ளே அனுமதிப்பது வழக்கம். அதன்படி போலீசார் சோதனை ஏற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

வேல்முருகன்

இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் காக்கி பேண்ட் அணிந்திருந்தார். கலர் சட்டையில் இருந்த அவர், காவல்துறையினரின் பெல்ட் அணிந்திருந்தார். அவரது இரு சக்கர வாகனத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, சுகாதார ஆய்வாளர் பணியிடத்துக்கான நேர்காணலில் பங்கேற்பதற்காக வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

அவர் கையில் வைத்திருந்த ஃபைலை காவல்துறையினர் வாங்கி பரிசோதித்தனர். அதில், சி.பி.ஐ ஸ்பெஷல் ஆபீஷர், விஜிலன்ஸ், மத்திய போலீஸ், மத்திய உளவுப்பிரிவு, தேசிய மனித உரிமை ஆணையம், எல்ஐசி என 20-க்கும் அதிகமான போலி அடையாள அட்டைகளை வைத்திருந்தார். அத்துடன் போலியாக த.வெ.க அடையாள அட்டையையும் அவரது பெயரில் தயாரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கிலம், இந்தி,தமிழ் என பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டிருந்த விதவிதமாக அடையாள அட்டைகளை பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

போலி அடையாள அட்டைகள்

அவரிடம் விசாரித்தபோது, அவரது பெயர் வேல்முருகன் (38) என்பதும் நெல்லை மாவட்டம் கூந்தங்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பல வகையான அடையாள அட்டைகளை வைத்திருந்தது குறித்து அவரிடம் போலீசார் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னார். அதையடுத்து அவரை பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இப்போது அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது தெரியவந்தது.

வேல்முருகன்

மத்திய மாநில அரசு அலுவலக சீலுடன் கூடிய போலியான அடையாள அட்டைகளைத் தயாரித்த அவர், அவற்றைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் இந்த மோசடிக்குப் பின்னணியில் யாராவது துணையாக இருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். வேல்முருகன் மீது அரசு அதிகாரி போல நடித்து ஏமாற்றியதாக வழக்குப் பதிவுசெய்து போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க

சேலம்: பண உதவி செய்வதாக ஏமாற்றி 30 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த தவெக நிர்வாகி - அதிர்ச்சி பின்னணி

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகில் உள்ள புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான மணிகண்டன். த.வெ.க ஒன்றிய நிர்வாகியான மணிகண்டன், வீட்டின் அருகில் கடை நடத்தி வரும் நிலையில... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி : 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் 16 வயது சிறுவன் கைது!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில... மேலும் பார்க்க

காய்கறிகளுக்கு இடையே ரகசியமாக கஞ்சா செடி வளர்ப்பு – ஒடிசா மாநில தொழிலாளி சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாதாபெனந்தா ஜெனா (46) என்ற நபர், கடந்த 27 ஆண்டுகளாக கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தடாகம் அருகேயுள்ள பன்னிமடை கணேஷ் நகர் பகுதியில் உள்... மேலும் பார்க்க