செய்திகள் :

Single Parent: Retirment பிளானிற்கு எதில் முதலீடு செய்யலாம்?| பணம் வளர்ப்போம்

post image

வாழ்க்கை முழுவதும் ஓடி நிம்மதியாக உட்காருவது 'ரிட்டயர்மென்ட்' காலத்தில் தான். பிற பெற்றோர்களை விட, சிங்கிள் பேரன்டுகள் சற்று அதிகமாகவே ஓடியிருப்பார்கள். அதனால், அவர்களுக்கு ரிட்டயர்மென்ட் கால ஓய்வு மிக அதிகமாக தேவைப்படும்.

ஆக, அந்த ரிட்டயர்மென்ட் காலத்தை நிதி ரீதியாக எப்படி பிளான் செய்ய வேண்டும் என்பதை சொல்கிறார் குடும்ப நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.

"பொதுவாகவே, ரிட்டயர்மென்ட் பிளானிங் என்பது காஸ்ட்லியான நிதி இலக்கு. ஒவ்வொரு மாதம் எத்தனை செலவு ஆகிறது என்பதை வைத்து 30 ஆண்டுகளுக்கு கூட்டிப் பார்த்தால், அது ரிட்டயர்மென்ட் கார்ப்பஸ்.

லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

அதை மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட் என அவரவர் தோதிற்கு ஏற்ப சேர்த்து வைக்கலாம்.

சிங்கிள் பேரன்டுகள் இந்தக் கார்ப்பஸை சேர்ப்பதோ, சொத்தைப் பெருக்குவதோ அவ்வளவு எளிது அல்ல.

ஒவ்வொரு நிதி அடியையும் பார்த்து, கவனமாக வைத்தால் தான், குழந்தைகளின் கல்விச் செலவு முதல் ரிட்டயர்மென்ட் பிளானிங் வரை அனைத்தும் ஸ்மூத்தாக இருக்கும்.

முடிந்தால், நிதி பிளானிங்கிற்கு நிதி ஆலோசகரைக் கூட சென்று பாருங்கள்.

பெரும்பாலும் பிள்ளையின் கல்யாண செலவும், ரிட்டயர்மென்ட் காலமும் ஒன்றாக தான் வரும்.

ஆடம்பரமாக கல்யாணம் செய்ய வேண்டும் என்று சேர்த்து வைத்திருக்கும் பணம் அனைத்தையும் பிள்ளையின் திருமண செலவுக்கு செலவழித்துவிடாதீர்கள்.

ஒரு நாள் ஆடம்பரம் மீதி காலத்திற்கு நிதி சிக்கலை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தி விடும்.

நிதி பிளானிங், நிதி சப்போர்ட்டை விட, சிங்கிள் பேரன்டுகளுக்கு மென்டல் ஹெல்த் மிக மிக முக்கியம். அது இருந்தால் தான் அனைத்து பிளானிங்கையும் பக்காவாக செய்து முடிக்க முடியும்.

அதனால், சிங்கிள் பேரன்டுகளே, இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்".

Single Parent: அவங்க குழந்தைகளின் கல்விச் செலவை எப்படி பிளான் செய்ய வேண்டும்? | பணம் வளர்ப்போம்

இன்று ஒவ்வொரு பெற்றோர்களும் ஓடியாடி உழைப்பது - அவர்களது குழந்தையின் எதிர்காலத்திற்காக தான். அந்த எதிர்காலத்தை சிங்கிள் பேரன்டுகள் எப்படி சிறப்பாக கட்டமைக்கலாம் என்பதை கூறுகிறார் குடும்ப நிதி ஆலோசகர் ல... மேலும் பார்க்க

பங்குச் சந்தை இறக்கத்தில் SIP-யை நிறுத்துவது புத்திசாலித்தனமா? இதனால் லாபம் கிடைக்குமா?

காய்கறி சந்தை: தக்காளி விலை 1 கிலோ ரூ.50... நீங்கள் ஒரு கிலோ தக்காளியை வாங்குகிறீர்கள். 30 நாள்களுக்குப் பிறகு... தக்காளி விலை 1 கிலோ ரூ.25... 'சூப்பர்' என்று நினைத்து, நீங்கள் ஒரு கிலோ தக்காளிக்குப் ... மேலும் பார்க்க

Rajesh Exports விவகாரம்: LIC-ல் செய்த முதலீடு, காப்பீட்டிற்கு பிரச்னையா?

கடந்த இரண்டு வாரங்களாகவே, பங்குச்சந்தை உலகின் பரபரப்பு டாபிக், 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்'. கடந்த 3-ம் தேதி, செபி இந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தது. அதாவது, செபி இந்த நிறுவனத்தின் 2020... மேலும் பார்க்க

Single Parent: குழந்தை எதிர்காலப் பாதுகாப்பிற்கு ஆயுள் காப்பீடு எவ்வளவு வேண்டும்?|பணம் வளர்ப்போம்

ஒருவர், ஒரு சம்பாத்தியம் என்று ஒரு வண்டி மாட்டை நம்பி தான் சிங்கிள் பேரன்டுகளின் வாழ்க்கை ஓடும். அதனால், அந்த ஒருவர் மிகப் பாதுகாப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருக்க வேண்டும். அதற்கான ரூட்டைக் கா... மேலும் பார்க்க

சவுதி வாழ் NRI-களுக்கான ரிட்டைர்மென்ட் பிளான்: 50+ வயதினர் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!

சவுதி அரேபியாவில் பல வருடங்களாக உழைத்து, சேமித்த பணத்துடன் தாயகம் திரும்பத் திட்டமிடும் என்.ஆர்.ஐ-களுக்கு (NRIs) ஓய்வுகாலத் திட்டமிடல் என்பது மிக முக்கியமான ஒன்று. 50 வயதைத் தாண்டியவுடன், 'கையிலிருக்க... மேலும் பார்க்க

Single Parent: உங்க குழந்தை லைஃப்ஸ்டைலை மாற்றாமல் இருக்க, நீங்க வலையில் மாட்டாதீங்க|பணம் வளர்ப்போம்

நாட்டிற்கு பட்ஜெட் எவ்வளவு முக்கியமோ... அதே அளவிற்கு வீட்டிற்கும் பட்ஜெட் மிக முக்கியம். அனைத்து செலவுகளும் 'நாம்' தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற போது, சிங்கிள் பேரன்டுகளுக்கு பொறுப்பு சற்று கூ... மேலும் பார்க்க