செய்திகள் :

Single Parent: குழந்தை எதிர்காலப் பாதுகாப்பிற்கு ஆயுள் காப்பீடு எவ்வளவு வேண்டும்?|பணம் வளர்ப்போம்

post image

ஒருவர், ஒரு சம்பாத்தியம் என்று ஒரு வண்டி மாட்டை நம்பி தான் சிங்கிள் பேரன்டுகளின் வாழ்க்கை ஓடும்.

அதனால், அந்த ஒருவர் மிகப் பாதுகாப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருக்க வேண்டும். அதற்கான ரூட்டைக் காட்டுகிறார் குடும்ப நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.

"ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் அனைத்து சம்பாதிக்கும் நபருக்கும் ஆயுள் காப்பீடு வேண்டும்... அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு வேண்டும்.

சாதாரணக் குடும்பத்திற்கே இது அவசியம் என்கிற போது, சிங்கிள் பேரன்டுகளுக்கு இது அத்தியாவசியம்.

லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

ஒவ்வொரு சிங்கிள் பேரன்டை தூங்கவிடாத கேள்வி - 'நமக்கு பின் நம் குழந்தையின் நிலைமை என்ன?' என்பது தான்.

இந்தக் கவலையைப் போக்க, சிங்கிள் பேரன்ட் தன்னுடைய ஆண்டு வருமானத்தில் 20 மடங்கை ஆயுள் காப்பீடாக கட்டாயம் எடுத்துவிட வேண்டும்.

தனக்கு, தன்னுடைய குழந்தைக்கு என ஃபேமிலி ஃப்ளோட்டர் காப்பீடு எடுத்துவிட வேண்டும்.

காப்பீடு எடுப்பது, சேமித்து வைப்பது, முதலீடு செய்வது போன்றவற்றை விட, மிக முக்கியமானது, அது அவர்களுக்குப் பின் குழந்தைக்கு சென்று சேர்வது.

காப்பீடு, சேமிப்பு, முதலீடு செய்யும் போது, குழந்தையை நாமினியாக போட்டு, உங்களது நம்பிக்கைக்குரிய நபரை Guardian ஆக நியமியுங்கள்.

அசையா சொத்துகளுக்கு உயில் எழுதி வையுங்கள். வீட்டில் ஏ4 ஷீட்டில் சொத்துகள் உரிமைக் குறித்து எழுதி வைத்தாலே, அது உயில் தான். அதை பதிவு செய்ய வேண்டும் என்பது கூட இல்லை.

ஆனால், அது எங்கிருக்கிறது என்பது குறிப்பிட்டவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

உயில் எழுதும் போது, Guardian-க்கு சொத்தை விற்கும் உரிமை இல்லை என்பதை குறிப்பிட்டுவிடுங்கள். இது உங்களின் குழந்தையின் நிதி பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யும்".

சவுதி வாழ் NRI-களுக்கான ரிட்டைர்மென்ட் பிளான்: 50+ வயதினர் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!

சவுதி அரேபியாவில் பல வருடங்களாக உழைத்து, சேமித்த பணத்துடன் தாயகம் திரும்பத் திட்டமிடும் என்.ஆர்.ஐ-களுக்கு (NRIs) ஓய்வுகாலத் திட்டமிடல் என்பது மிக முக்கியமான ஒன்று. 50 வயதைத் தாண்டியவுடன், 'கையிலிருக்க... மேலும் பார்க்க

Single Parent: உங்க குழந்தை லைஃப்ஸ்டைலை மாற்றாமல் இருக்க, நீங்க வலையில் மாட்டாதீங்க|பணம் வளர்ப்போம்

நாட்டிற்கு பட்ஜெட் எவ்வளவு முக்கியமோ... அதே அளவிற்கு வீட்டிற்கும் பட்ஜெட் மிக முக்கியம். அனைத்து செலவுகளும் 'நாம்' தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற போது, சிங்கிள் பேரன்டுகளுக்கு பொறுப்பு சற்று கூ... மேலும் பார்க்க

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்: மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனத்தில் LIC முதலீடு - பின்னணி என்ன?

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்... கடந்த சில வாரங்களாக இந்தப் பங்கு நிறுவனத்தின் பெயர் பங்குச் சந்தையில் தினமும் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், இந்த நிறுவனப் பங்கின் விலை தினமும் 5% முதல் 10% இறங்கி, லோயர... மேலும் பார்க்க

Retirement: 'பாதுகாப்பு + வளர்ச்சி+ இரண்டாவது வருமானம்'- அரசு ஊழியர்களுக்கான ஓய்வுக்காலத் திட்டமிடல்

"அரசு வேலை... நிரந்தர வருமானம், ஓய்வு பெற்றால் நிம்மதியான பென்ஷன்!" - ஒரு தலைமுறைக்கு முன்னால் வரை தமிழ்நாட்டின் நடுத்தரக் குடும்பங்களின் ஆகச் சிறந்த கனவு இதுவாகத்தான் இருந்தது. ஆனால், பழைய பென்ஷன் தி... மேலும் பார்க்க

Single Parent: நிதி விஷயத்தைப் பத்தி பிள்ளைங்க கிட்ட பேசுங்க; இல்லைனா சிரமம்|பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இ... மேலும் பார்க்க

50-ல் தொடங்கி, 60-ல் சிம்பிளா 1 கோடி சேர்த்து, நிம்மதியா ரிட்டர்யர் ஆகணுமா? இதோ கிளியர்கட் பிளானிங்!

''மரம் நடுவதற்கு சிறந்த நேரம் எது? என்று கேட்டால், 10 வருஷத்துக்கு முன்பு. அல்லது இன்று'' என்று ஒரு ஜப்பானிய மொழியில் ஒரு பழமொழி இருக்கிறது. ஒரு மரத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வளர்ந்திருந்தால், இ... மேலும் பார்க்க