செய்திகள் :

Single Parent: நிதி விஷயத்தைப் பத்தி பிள்ளைங்க கிட்ட பேசுங்க; இல்லைனா சிரமம்|பணம் வளர்ப்போம்

post image

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும்.

அப்படி இந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை, நாம் பார்க்கப்போகும் டாபிக், 'சிங்கிள் பேரன்ட் நிதிப் பிளானிங்'.

மாற்றம் ஒன்று தான் மாறாதது. வாழ்க்கையில் ஆயிரமாயிரம் திட்டங்களை பக்காவாகப் பிளான் செய்து வைத்திருப்போம். ஆனால், சிங்கிள் பேரன்ட் ஆகும் அந்த ஒரு நொடி, அத்தனையும் தலைகீழாக மாறியிருக்கும்.

லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

பெரும்பாலான சிங்கிள் பேரன்டுகளின் வாழ்க்கை மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதாக தான் அமைகிறது.

அதனால், வாழ்க்கையின் இந்த அத்தியாயத்தை சிங்கிள் பேரன்டுகள் கவனமாக கையாள வேண்டும். அப்படி கையாள்வதற்கு தனிப்பட்ட பொருளாதாரம் மிக முக்கியம்.

சிங்கிள் பேரண்டுகள் தங்களுடைய தனிப்பட்ட பொருளாதாரத்தை ஆரம்பக்கட்டத்தில் எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் குடும்ப நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.

"நான் சிங்கிள் பேரன்ட் ஆனாலும், என்னுடைய குழந்தையின் சௌகரியம் சிறிதும் குறையக்கூடாது - சிங்கிள் பேரன்டுகளின் இந்த எண்ணம் தான் அவர்களின் நிதி பிளானிங் முதல் மற்றும் முக்கிய சறுக்கலை தருகிறது.

'இதுவரை இரண்டு வருமானங்கள் வந்துகொண்டிருந்தது அல்லது நமக்கு சப்போர்ட் செய்ய ஒருவர் இருந்தார். இப்போது நாம் தான் எல்லாமே' என்பதை முதலில் இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதை குழந்தைகளுக்கும் மெல்ல மெல்ல புரிய வைக்க வேண்டும். உங்களுடைய குழந்தைகளுக்கு 8 வயது ஆகியிருந்தால், தாராளமாக, அவர்களிடம் உங்கள் நிலை குறித்து கூறலாம். அவர்கள் புரிந்துகொள்வார்கள். உங்களுக்கு ஏற்றவாறு அட்ஜஸ்டும் செய்வார்கள்.

சிங்கிள் பேரன்டிங்
சிங்கிள் பேரன்டிங்

இந்தப் புரிதலை கொண்டு வந்துவிட்டாலே, பட்ஜெட்டை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்.

அடுத்ததாக, ஒரு மாதத்திற்கு செலவுகள், இ.எம்.ஐ... என எவ்வளவு செலவு ஆகிறது என்பதை கணக்கிட்டு, அதை ஆறு மாத அளவிற்கு எமர்ஜென்சி ஃபண்டாக ரெடி செய்து வைத்துவிடுங்கள்.

ஏதேனும் கடன் இருந்தால், அதை சீக்கிரம் முடிப்பதற்கான வழியைத் தேடுங்கள். ஒரு வருமானத்தில் தான் இனி அனைத்து செலவுகளையும், சேமிப்புகளையும் பார்க்க வேண்டும். இந்த நிலையில், கடன் என்பது கூடுதல் சுமை. அதனால், அதை இறக்கி வைப்பதற்கான வழியைப் பார்ப்பது புத்திசாலித் தனம்".

50-ல் தொடங்கி, 60-ல் சிம்பிளா 1 கோடி சேர்த்து, நிம்மதியா ரிட்டர்யர் ஆகணுமா? இதோ கிளியர்கட் பிளானிங்!

''மரம் நடுவதற்கு சிறந்த நேரம் எது? என்று கேட்டால், 10 வருஷத்துக்கு முன்பு. அல்லது இன்று'' என்று ஒரு ஜப்பானிய மொழியில் ஒரு பழமொழி இருக்கிறது. ஒரு மரத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வளர்ந்திருந்தால், இ... மேலும் பார்க்க

அதிகமாக சம்பாதிப்பவர்கள் அதிகமான பணத்தை சேர்க்கிறார்களா? - சர்வே சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்!

மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் ரூ.30 ஆயிரம் சம்பாதிப்பவர்களின் பெரிய மனக்கவலையே ''வருகிற வருமானத்தில் நம்மால் குறைவாகத்தானே முதலீடு செய்ய முடிகிறது. லட்சம் ரூபாய்க்கு மேல் நமக்கு சம்பளம் கிடைத்தால், ரூ.30 ஆ... மேலும் பார்க்க

'வீடு/நிலம் வாங்கியதும் உட்கார்ந்திராதீங்க; உடனே செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன? | பணம் வளர்ப்போம்

நிலம் அல்லது வீட்டைப் பார்த்தாகிவிட்டது. ஆவணங்களையும் சரிப் பார்த்தாச்சு. எல்லாம் சரியாக இருக்க, நிலம் அல்லது வீட்டை வாங்கிவிட்டோம். 'அப்பாடா' என்று இப்போது உட்கார்ந்துவிடக் கூடாது. இன்னும் செய்ய வேண்... மேலும் பார்க்க

நிலம்/வீடு வாங்கப் போறீங்களா? - சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் என்னென்ன? |பணம் வளர்ப்போம்

முந்தைய அத்தியாயங்களில் சொன்ன அனைத்தையும் செக் செய்து, ஒரு நிலம் அல்லது வீட்டை வாங்க செலெக்ட் செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடுத்து, சொத்து சார்ந்த ஆவணங்களில் கவனம் செலுத்த வேண்டும். காரணம... மேலும் பார்க்க

உங்களை 'பணக்காரர்' ஆக்கும் 5 எளிய படிகள்! ஃபாலோ பண்ண நீங்க ரெடியா?

நண்பர்களே, அலுவலகத்தில் தினமும் 9-டு-6 உழைக்கிறோம், சம்பளம் வருகிறது, பில் கட்டுகிறோம்... இறுதியில் கையில் மிஞ்சுவது என்ன? மாதக் கடைசியில் "அடுத்த சம்பளம் எப்போது வரும்?" என்ற ஏக்கம் மட்டுமே!இதை மாற்ற... மேலும் பார்க்க

இறக்கத்தில் பங்குச் சந்தை... மொத்த முதலீடு (Lump sum) இப்போது செய்யலாமா, கூடாதா?

இந்தியப் பங்குச் சந்தையின் முக்கியமான குறியீடான நிஃப்டி மீண்டும் 23000 புள்ளிக்களுக்குக் கீழே போகுமா என்கிற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இந்த இறக்கம் ஏன் வந்திருக்கிறது, இந்த இறக்கம் இன்னும்... மேலும் பார்க்க