செய்திகள் :

திருச்சி: 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; 7 சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது

post image

திருச்சி, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி, தாய் தந்தை, இருவரும் பிரிந்த நிலையில் அவரது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி காணாமல் போய் உள்ளார். இது குறித்து, இந்த சிறுமியின் உறவினர்கள் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரியின் அடிப்படையில் அவரை போலீஸார் தேடி வந்த நிலையில் அந்த சிறுமியை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அந்த சிறுமியை அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்தபோது, அவர்களுடன் செல்ல தனக்கு விருப்பமில்லை என அந்த சிறுமி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, அந்த சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். அந்த காப்பகத்திற்கு சென்ற சிறுமியை அங்கிருந்தவர்கள் விசாரித்தபோது சிலர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

trichy

அதன் அடிப்படையில் அவர்கள் குழந்தைகள் நலத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்று விசாரித்து இது குறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீஸார் அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மோகன்ராஜ் கிஷோர் மற்றும் ஏழு சிறுவர்கள் என ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை காரில் அழைத்து சென்று கார் ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த இரண்டு நாள்களில் திருச்சியில் நடந்த இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாடகை வீட்டை விற்க மறுத்த பேராசிரியை; 1,400 கி.மீ பயணித்து வந்து கொலைசெய்த தம்பதி - பகீர் சம்பவம்!

டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள சத்யம் என்ற கட்டடத்தில் தபோஸ்மிதா என்ற பெண் தனியாக வசித்து வந்தார். அவர் டெல்லியில் உள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக... மேலும் பார்க்க

பார்சல் மூலம் போதைப்பொருள் வாங்கிய விஞ்ஞானி - கூரியர் ஊழியர்கள் தகவலால் போலீசில் சிக்கியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம், புனே ஹவேலி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் சர்காலே (39). விஞ்ஞானியான இவர் கேரள மாநிலம் ஆலப்புழா தேசிய வைராலஜி நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'டெக்னிக்கல் ஆபீசர்' ஆகப் பணி... மேலும் பார்க்க

லேப்டாப் திருட்டு; த.வெ.க நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது; திருச்சியில் அதிர்ச்சி!

திருச்சி, ஜங்சன் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த மிப்டின் என்பவரது லேப்டாப் திருடு போய் உள்ளது. இது குறித்து, அவர் திருச்சி ரெயில்வே போலீஸில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படைய... மேலும் பார்க்க

திருச்சி: சரித்திர பதிவேடு குற்றவாளி படுகொலை; அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பாரதியார் தெரு அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகபூப் பாட்ஷா. இவரது மகன் பாதுஷா என்கிற பாஷா (வயது: 24). பிரபல ரௌடியான இவரை, நேற்று நள்ளிரவு திர... மேலும் பார்க்க

``அவர் குற்றவாளி, ட்ரக் அடிக்ட்; உண்மை தெரியாம பேசாதீங்க!" - கணவர் குறித்து வீடியோ வெளியிட்ட பெண்

பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற தர்மராஜ் (38). இவரது மனைவி அட்சயா (25) இவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். ராஜா தன் மனைவி குறித்து சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களி... மேலும் பார்க்க

ஈரோடு: மதுபோதையில் போலீஸ் ஜீப்பை ஓட்டிய ஹெட் கான்ஸ்டபிள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்!

ஈரோட்டில் இருந்து தாளவாடி நோக்கிச் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்று சாலையின் இடது, வலது என தாறுமாறாக ஓடுவதை சக பயணிகள் பார்த்துள்ளனர். மற்றவர்கள் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு இயக்கப்பட்ட அந்... மேலும் பார்க்க