செய்திகள் :

பார்சல் மூலம் போதைப்பொருள் வாங்கிய விஞ்ஞானி - கூரியர் ஊழியர்கள் தகவலால் போலீசில் சிக்கியது எப்படி?

post image

மகாராஷ்டிரா மாநிலம், புனே ஹவேலி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் சர்காலே (39). விஞ்ஞானியான இவர் கேரள மாநிலம் ஆலப்புழா தேசிய வைராலஜி நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'டெக்னிக்கல் ஆபீசர்' ஆகப் பணியாற்றி வருகிறார். இவர் வெளிநாட்டிலிருந்து கூரியர் மூலம் தனக்குத் தேவையான ரசாயனப் போதைப்பொருளை ஆர்டர் செய்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. ​இதற்கிடையே அவர் ஆர்டர் செய்த பார்சல் ஒன்று கொச்சி சேரானல்லூரில் உள்ள சர்வதேச கூரியர் நிறுவனத்தின் முதன்மை மையத்திற்கு கடந்த சனிக்கிழமை வந்து சேர்ந்தது. பார்சலில் ஆலப்புழா முகவரி குறிப்பிடப்பட்டிருந்ததால், அது அங்கு வந்து சேர மேலும் இரண்டு நாள்கள் தாமதமாகும் என்பதை ஆன்லைன் டிராக்கிங் மூலம் பிரசாத் சர்காலே அறிந்துகொண்டார். இரண்டு நாள்கள் தாமதத்தை தவிர்க்க விரும்பிய அவர்  கடந்த சனிக்கிழமை மாலை கொச்சியில் உள்ள கூரியர் அலுவலகத்திற்கு நேரடியாகவே சென்று பார்சலை பெற்றுக்கொண்டார். ஆலப்புழா முகவரியில் உள்ள ஒருவர், கொச்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து அவசரமாக பார்சலை வாங்கியதும், அவரது பதற்றமான நடத்தையும் கூரியர் ஊழியர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. கூரியர் அலுவலக ஊழியர்கள் உடனடியாக இது குறித்து சேரானல்லூர் போலீஸாருக்கு தெரிவித்தனர். பிரசாத் சர்காலே பார்சலை வாங்கிக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறிய உடனே, அங்கு மறைந்திருந்த கொச்சி போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையினரும், போலீஸாரும் சேர்ந்து மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரது பார்சலுக்குள் 3.630 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது
கைது

இதையடுத்து விஞ்ஞானி பிரசாத் சர்காலே ​கைது செய்யப்பட்டார். பிரசாத் சர்காலே மருத்துவ ஆராய்ச்சித் துறையில் மிகச் சிறந்த பின்னணி கொண்டவர். மருத்துவத் தொழில்நுட்பப் பிரிவில் இவரது சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனமும் இணைந்து 'கோவாக்சின்' தடுப்பூசியை உருவாக்கியபோது, அந்த முதன்மை நிபுணர்கள் குழுவில் பிரசாத் சர்காலேவும் முக்கிய உறுப்பினராகப் பணியாற்றிப் பாராட்டுகளைப் பெற்றவர் ஆவார். அவரிடம் ​போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவ்வளவு உயரிய பதவியில் இருக்கும் பிரசாத் சர்காலே கடந்த சில வருடங்களாகவே இந்த வீரியமிக்க ரசாயனப் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள், அவர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காகவே கூரியர் மூலம் வரவழைத்துள்ளதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பிரசாத் சர்காலே

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "கைது செய்யப்பட்ட பிரசாத் சர்காலே மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் கைதுசெய்யப்பட்டுள்ள விவரம் ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றனர். நெதர்லாந்து நாட்டில் இருந்து அவருக்கு இந்த பார்சல் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. ​அவருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கர்நாடகா: ஆன்லைன் விளையாட்டைத் தடுத்ததால் ஆத்திரம்? - தந்தை, சகோதரியை குத்திக் கொலைசெய்த வாலிபர்!

கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் உள்ள ஹோசா அயோத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட் நாயுடு. இவர் தனது மகனிடம் ஆன்லைன் மொபைல் கேம்களை விளையாட வேண்டாம் என்று கண்டித்தார். இதனால் க... மேலும் பார்க்க

ஈரோடு: செல்போன் பார்ப்பதைக் கண்டித்த பெற்றோர், விபரீத முடிவெடுத்த பிளஸ் டூ மாணவி!

ஈரோடு மாவட்டம், நடுப்பாளையம் அருகில் உள்ள மணக்காட்டுப்புதூரைச் சேர்ந்த 17 வயதான சிறுமி, அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12- ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இவரின் தந்தை தனியார் வங்கி ஒன்றில்... மேலும் பார்க்க

வாடகை வீட்டை விற்க மறுத்த பேராசிரியை; 1,400 கி.மீ பயணித்து வந்து கொலைசெய்த தம்பதி - பகீர் சம்பவம்!

டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள சத்யம் என்ற கட்டடத்தில் தபோஸ்மிதா என்ற பெண் தனியாக வசித்து வந்தார். அவர் டெல்லியில் உள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக... மேலும் பார்க்க

திருச்சி: 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; 7 சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது

திருச்சி, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி, தாய் தந்தை, இருவரும் பிரிந்த நிலையில் அவரது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந... மேலும் பார்க்க

லேப்டாப் திருட்டு; த.வெ.க நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது; திருச்சியில் அதிர்ச்சி!

திருச்சி, ஜங்சன் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த மிப்டின் என்பவரது லேப்டாப் திருடு போய் உள்ளது. இது குறித்து, அவர் திருச்சி ரெயில்வே போலீஸில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படைய... மேலும் பார்க்க

திருச்சி: சரித்திர பதிவேடு குற்றவாளி படுகொலை; அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பாரதியார் தெரு அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகபூப் பாட்ஷா. இவரது மகன் பாதுஷா என்கிற பாஷா (வயது: 24). பிரபல ரௌடியான இவரை, நேற்று நள்ளிரவு திர... மேலும் பார்க்க