போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு - வேலூர் புதிய பேருந்து நிலையத்தில...
தங்கம்: 'பவுனுக்கு ரூ.5,600 குறைவு' - இது நேற்றும், இன்றும் மட்டும்; 'ஆஹா' இது தான் சூப்பர் நேரமா?
சர்வதேச சந்தையிலும் சரி... இந்தியாவிலும் சரி... தங்கம் மற்றும் வெள்ளி விலை நல்ல சரிவை சந்தித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) தங்கத்தின் விலை 4,071 டாலர்கள். ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 63.39 டாலர்கள்.
சென்னையை எடுத்துகொண்டால், இன்று ஒரு தங்கம் ரூ.13,500-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,08,000-க்கும் விற்பனை ஆகி வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.260 ஆகும்.
நேற்றும், இன்றும் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.700-ம், பவுனுக்கு ரூ.5,600-ம் குறைந்துள்ளது... வெள்ளி விலை ரூ.10 குறைந்துள்ளது.
ஈரான் போருக்கு முன், சென்னையில் ஒரு பவுனுக்கு ரூ.1.20 லட்சத்திற்கு மேல் விற்றுக்கொண்டிருந்த தங்கம் விலை, தற்போது ரூ.1.08 லட்சத்திற்கு இறங்கியுள்ளது.
போர் காரணமாக, உலக நாடுகளும், முதலீட்டாளர்களும் தங்கத்தை விட்டு கச்சா எண்ணெய், அமெரிக்க டாலர்கள் என திசை மாறியதே இந்தத் தங்கம் விலை சரிவிற்கு மிக முக்கிய காரணம்.
தங்கம் வாங்கலாமா?
இந்தச் சரிவின் போதே, தங்க நகைகளை வாங்குவதும், தங்கத்தில் முதலீடு செய்துவிடுவதும் நல்லது. ஆனால், இந்தியாவில் தற்போது தங்கம், வெள்ளி இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளதும், ஓராண்டிற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்திய பிரதமர் மோடி அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.



















