செய்திகள் :

கோவை: கடத்தப்பட்ட இளைஞர்கள்; ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த காவலர்கள் - அதிர்ச்சி சம்பவம்

post image

கோவை மாவட்டம், போத்தனூரை அடுத்த சித்தண்ணபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் நவீன் (29). இவர் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் தங்கியிருந்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி மதியம், நவீனின் அக்கா பரமேஸ்வரியின் செல்போனுக்கு வந்த அழைப்பில் பேசிய அடையாளம் தெரியாத ஒரு நபர், “உன் தம்பி நவீனைக் கடத்தி வைத்துள்ளோம். அவர் உயிரோடு வேண்டுமென்றால் உடனடியாக ரூ.50 லட்சம் தர வேண்டும்” எனக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி, நவீனின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

போத்தனூர் காவல் நிலையம்
போத்தனூர் காவல் நிலையம்

இதற்கிடையே, நவீனின் நண்பரான நிர்மல்குமார் (29) என்பவரின் மனைவி ஜெனிதாவும், தன் கணவரைக் காணவில்லை என்று பரமேஸ்வரியைத் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். தொடர்ந்து அன்றிரவே, நவீனின் செல்போன் எண்ணில் இருந்து ஜெனிதாவிற்கு வந்த அழைப்பில், இருவரையும் கடத்தியதை ஒப்புக்கொண்ட கும்பல், பணம் தராவிட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளது. இது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள் மற்றும் கடத்தல்காரர்கள் பேசிய செல்போன் எண்களைக் கொண்டு போலீஸார் துப்புத் துலக்கினர்.

இதற்கிடையே, கடத்தல்காரர்களின் திட்டப்படியே பணத்தைத் தயார் செய்தது போல் காட்டி, நவீன் மற்றும் நிர்மல்குமாரின் குடும்பத்தினரை திருப்பூர் செல்ல போலீஸார் அறிவுறுத்தினர். போலீஸாரும் சாதாரண உடையில் அவர்களைப் பின்தொடர்ந்தனர். திருப்பூரில் பணத்தைப் பெற வந்த இருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தில் காவலர்களாகப் பணிபுரிந்து வரும் மோகன் (37) மற்றும் ஆனந்த் (38) என்பது தெரியவந்தது.

கைதான காவலர்கள் கொடுத்த தகவலின்படி, திருப்பூரில் ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நவீன் மற்றும் நிர்மல்குமாரை போலீஸார் பத்திரமாக மீட்டனர். மேலும் அங்கிருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த காளிதாஸ் (31), ராம்குமார் (31) ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடத்தப்பட்ட நவீன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் பல்வேறு ஆன்லைன் வேலைகளுடன் சேர்த்து, தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததும், இதில் ஏற்பட்ட மோசடி மற்றும் பணத் தகராறே கடத்தலுக்குக் காரணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக மீட்கப்பட்ட நவீன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்: சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; கதறிய குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்ற நபர், அந்தச் சிறுமி... மேலும் பார்க்க

போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு - வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அலறும் பயணிகள்!

காஞ்சிபுரம் டவுன் வ.உ.சி நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அக்‌ஷய்பிரதீப் (வயது 32). செங்கல்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில், உறவினரின் வீ... மேலும் பார்க்க

பாலியல் விருந்து, மிரட்டல்; ரூ.954 கோடி வங்கி மோசடி! - அமெரிக்காவில் சிக்கிய இந்திய வம்சாவளி யார்?

அமெரிக்காவின் ஆடம்பர மாளிகையில் ஒரு கைது... அதன் பின்னணியில் 100 மில்லியன் டாலர் வங்கி மோசடி... சட்டத்தின் பிடியில் சிக்கிய இந்திய வம்சாவளி தொழிலதிபர்! அமெரிக்காவின் நிதித்துறையை அதிர வைத்திருக்கும் இ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: விசாரணைக்கு சென்ற போலீஸை நாயை ஏவி கடிக்கவைத்த தம்பதி - மோசடி புகாரில் சிக்கிய பின்னணி!

கன்னியாகுமரி மாவட்டம், சிராயன்விளையைச் சேர்ந்தவர் கிரேட் பிரின்ஸ்ராஜ் (31). ஐவுளிக்கடை உரிமையாளரான கிரேட் பிரின்ஸ்ராஜ் காதல் திருமணம் செய்துள்ளார். இவரது மனைவியின் பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னை இர... மேலும் பார்க்க

ஈரோடு: தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பயிர்கள்; `மாற்றுச் சமூகத்தினர்தான்...'- குமுறும் பட்டியலின விவசாயி

ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர், அமராவதி நகரைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட விளை நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவை கடந்த 5 ஆ... மேலும் பார்க்க

போலீஸ் ரெய்டு: குக்கரில் சாதத்துடன் கஞ்சாவை அவித்த இளைஞர் - காட்டிக்கொடுத்த விசில்!

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகு போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் விதமாக 'ஆப்ரேஷன் தூஃபான்' செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்ற... மேலும் பார்க்க